சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
34 வயது கர்ப்பிணி பெண்ணான சஹ்னாவும் தனது மூன்று குழந்தைகளுடன் உணவை பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தார். வரும் செப்டம்பர் மாதம் தனது நான்காவது குழந்தையை பெற்றெடுக்க உள்ள சஹ்னா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதிக மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார்.
"என் குழந்தைகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் எல்லா வகையிலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது பால் பாக்கெட் கூட வாங்க முடியாத நிலையில் நான் இங்கு நிற்கிறேன்" என்று அவர் கூறுகிறார்.
கூலித் தொழிலாளியாக இருக்கும் சஹ்னாவின் கணவர் வாரத்திற்கு 800 இந்திய ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், அதை வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார்.
"நாட்டின் தலைவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள்; அவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றால், என் குழந்தைகள் ஏன் அப்படி இருக்கக்கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
மனிதாபிமான நெருக்கடி
இலங்கையில் ஓராண்டு காலத்தில் மிகப் பெரிய விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்களில் சிலவற்றின் ஒப்பீடு
சூழ்நிலை இப்படி இருக்க, சஹ்னா தனது அடுத்த குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மென்மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் தலைநகரான கொழும்புவில் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அதன் மேயர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்வெட்டு போன்றவை தினசரி வாழ்வின் அங்கமாகிவிட்டதால் மக்களால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பொருட்களை வாங்கவோ மீண்டு வரவோ அல்லது சமைக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது.
"மக்களால் தாங்கள் முன்பு வாங்கி வந்த பொருட்களை இப்போது வாங்க முடியவில்லை. எனவே, மக்கள் உணவு உண்பதையும், குறிப்பாக சத்தான உணவு உண்பதை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் மிகப் பெரிய பிரச்னை என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்" என்று யுனிசெஃப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறுகிறார்.
"நாங்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க முயன்று வருகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்பது நல்லதுதான், ஆனால் அதைத் தவிர்க்க பல்வேறு தரப்பினரின் ஆதரவு அவசியம்."
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மேலும் 10 லட்சம் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கவும் அவசர நிதி உதவிக்கு யுனிசெஃப் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று என்று இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறுகிறார்.
மக்கள் பெரும்பாலும் அந்நியர்களின் தயவை நாடியிருப்பதால், இந்த பொருளாதார நெருக்கடி ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தருணமாகவும் அமைந்துள்ளது. ஆனால் இரக்கமும் நம்பிக்கையும் கூட இப்போது விலைமதிப்பற்றவைகளாக மாறி வருகின்றன.
கொடையாளர்களின் உதவி மட்டும் கிடைக்காவிடில் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருந்திருக்கும் என்று கொழும்புவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவரான சமன் குமாரா கூறுகிறார்.
தற்போது அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் "முற்றிலும் கொடையாளர்களின் நிதியுதவியை நம்பியே இந்த மருத்துவமனை இயங்குகிறது" என்றும் பல நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளதால் இன்னும் நிறைய கொடையாளர்கள் உதவ முன்வர வேண்டுமென்றும் அவர் கூறுகிறார்.
மறுபுறம், சமுதாய சமையல் கூடத்தில் உள்ள சந்திரிகா, தனது மகனுக்கு கிடைத்த உணவை ஊட்டிவிடுவதை நிறைவு செய்கிறார்.
"என்னுடைய மகிழ்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால் எங்களது குழந்தைகள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது" என்று அவர் கூறுகிறார்.
"அவர்கள் வளரும்போது சூழ்நிலை என்னவாகும் என்று எனக்கு தெரியவில்லை."
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!