மருத்துவர்களே கைவிட்ட பிறகும் காதலால் மீண்ட உயிர்! : 7 ஆண்டுகளாக உயிருக்குப் போராடிய கணவனைக் காப்பாற்றிய மனைவி - மனதை உருக்கும் ஜப்பானிய தம்பதியின் காதல் கதை
02 Nov, 2026
''10 நாட்களாக நாங்கள் மண்ணெண்ணை வரிசையில் காத்திருக்கின்றோம். பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டே காத்திருக்கின்றோம். 17, 18 வயது பிள்ளைகள் எங்களுக்கு. அவர்களையும் நாங்கள் வீதிக்கு இறக்கியுள்ளோம். பள்ளி கூடம் போக முடியாது. காலையில சாப்பிட சாப்பாடு இல்ல. நான் புட்டு அவித்து விற்று தான் பிள்ளைகளை வளர்க்கின்றேன்.
எனக்கு அதையும் செய்ய முடியவில்லை. கேஸ் இல்லை. இரவு இரவாக வரிசையில் என்னோட கணவர் காத்திருக்கின்றார். உதவி செய்ய யாரும் இல்ல. அரசாங்கத்திடம் நாங்கள் ஒன்றும் கேட்கவில்லை. கேஸ், மண்ணெண்ணை மாத்திரம் தந்தால் மட்டும் போதும், நாங்கள் உழைத்து வாழ்கின்றோம்." என சுமதி கண்ணீருடன் கருத்து தெரிவித்தார்.
பிரதமர் ரணில் ராஜபக்ஷ குடும்பத்தை காப்பாற்ற நினைப்பதாகவும் எனவே அவர் பதவி விலக வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் தெரிவித்தார்.
"அரிசி தட்டுப்பாடு நிலவுகின்றது. நாளுக்கு நாள் இந்த கள்ள சந்தையிலே வெவ்வேறு விலைகள் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். பால்மா இல்லை. கர்ப்பிணித் தாய்மார்கள், குழந்தைகள், பெண்களுக்கான உணவுகள் இல்லை. ஒவ்வொரு நாளும் குடும்பத்தில் இருக்கக்கூடியவர்கள் வரிசையில் இருக்க வேண்டிய தேவை இருக்கின்றது. இதனால், அழுத்தங்கள் ஏற்பட்டு, மரணங்கள் கூட ஏற்படுகின்றன. பிரதமர், ஒவ்வொரு நாளும் ஜோதிடரை போல தகவல் சொல்கின்றார். இன்னும் இரண்டு வாரங்கள் பொருத்துக்கொள்ளுங்கள், கேஸ் கப்பல் வந்திருக்கின்றது. எரிபொருள் கப்பல் வந்திருக்கின்றது என்று.
யார் என்றாலும், மக்களுக்கு நிலையாக ஆட்சியை கொடுக்க வேண்டும். இவ்வளவு வரிசையில் மக்கள் மன அழுத்தத்துடன் இருக்கும் போது, பெண்கள் நாங்கள் ஒரு விண்ணப்பத்தை கொடுக்க வந்திருக்கின்றோம். இதற்கு பொது போக்குவரத்தை நிறுத்தி, இவ்வளவு பாதுகாப்பை கொடுத்து, கண்ணீர் புகை வாகனங்களை கொண்டு வந்து குவித்திருக்கின்றார்கள். சமையலறையில் இருக்கின்ற பிரச்னைகளை சொல்வதற்கு தான் நாங்கள் வந்திருக்கின்றோம். முக்கியமாக பிரதமர் பதவி விலக வேண்டும். ராஜபக்ஷவை காப்பாற்றுவதை நிறுத்த வேண்டும்" என உமாசந்திரா பிரகாஷ் தெரிவிக்கின்றார்.
இந்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று விசேட உரையொன்றை நிகழ்த்தினார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.
அப்போது, எரிபொருள், எரிவாயு, மின்சாரம் மற்றும் உணவுப் பற்றாக்குறைக்கு அப்பால் மிக மோசமான நிலைமையை தற்போது தாம் எதிர்நோக்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இலங்கை இந்த இக்கட்டான சூழலிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கான சில யோசனைகளையும் அவர் முன் வைத்தார்.
''இலங்கையின் புதிய பொருளாதாரத்தை வலுப்படுத்தவும் உருவாக்கவும் நாம் எமது திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். முன்னோக்கி செல்லும் பாதைக்கான அடித்தளத்தை உருவாக்க, ஆகஸ்ட் மாதம் 2022இல் மீதமுள்ள காலத்திற்கு இடைக்கால வரவு செலவுத்திட்டத்தை முன்வைப்போம். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் வரும் நவம்பர் மாதம் தாக்கல் செய்யப்படும்.
இது தவிர, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான பல புதிய சட்டங்களை நாடாளுமன்றத்தில் முன்வைப்போம். நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சகல கட்சிகளுடனும் இவை தொடர்பில் நாம் ஏற்கனவே கலந்துரையாடலை ஆரம்பித்துள்ளோம்" எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!