இலங்கை போக்குவரத்து சபை சாரதிகளுக்கு திடீர் போதைப்பொருள் பரிசோதனை
கொழும்பு: இலங்கை போக்குவரத்து சபை (SLTB) சொந்தமான பேருந்துகளில் பயணிகள் பாதுகாப்பாக பயணம் செய்ய மற்றும் பயணிகள் நலத்தை உறுதிப்படுத்த, சாரதிகள் மீது போதைப்பொருள் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கியுள்ளது.
இ.போ.ச சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்தியுள்ளாரா என்பதை கண்டறிவதற்காக, இந்த விசேட சோதனை நேற்றைய தினம் (08.01.2026) முதல் நாட்டின் அனைத்து பேருந்து நிலையங்களிலும் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மட்டக்குளி பேருந்து டிப்போ வளாகத்தில் காலை 8.30 மணியளவில் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்ட இந்த நடவடிக்கையில், நவீன வசதிகளுடன் கூடிய நடமாடும் ஆய்வுக்கூட பேருந்து ஒன்றை பயன்படுத்தி சாரதிகளிடம் இருந்து உமிழ்நீர் மாதிரிகள் எடுக்கப்படுகிறது. மாதிரிகள் எடுத்துக்கொள்ளப்பட்ட பின்னர், சுமார் அரை மணி நேரத்தில் முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!