சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
காட்சிகள் மாறிய வியாழக்கிழமை
இலங்கை அதிபராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்ற கடந்த வியாழக்கிழமையிலிருந்து காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் அடுத்தடுத்த ஆலோசனைகளை நடத்தி வந்தார்கள். இருப்பினும் அன்று இரவு வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. அன்று காலையிலேயே போராட்டம் நடைபெறும் இடத்தில் பண்டாரநாயக சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த செஞ்சிலுவைச் சங்கத்தின் சிகிச்சை முகாம் அகற்றப்பட்டது.
அதே நேரத்தில் போராட்டக்காரர்கள் அதிபரின் செயலகத்தை விட்டு வெளியேறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டடத்தில் இருந்த கறுப்புக் கொடிகள், பதாகைகள் உள்ளிட்டவை அகற்றப்பட்டன. நடைபாதைகளில் இருந்த கூடாரங்களை மாற்றி அமைப்பதாக முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் பிபிசி தமிழிடம் பேசிய போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
காலி முகத்திடல் போராட்டம் நடைபெற்ற இடத்துக்குள் ராணுவத்தினர் நுழைந்த தருணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்பாக அதே இடத்தில் பிபிசி தமிழ் அளித்த நேரலையில்கூட இந்தத் தகவலை போராட்டக்காரர்கள் உறுதி செய்தனர். ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான போராட்டத்தை சிறிது அவகாசத்துக்குப் பிறகு தீவிரப்படுத்துவது என்று அவர்கள் கூறியிருந்தார்கள்.
கோட்டா கோ கம பகுதியில் கூடாரங்களை காலி செய்துவிட்டு அங்கு தென்னங் கன்றுகளை நடுவதற்கு நடவடிக்கைகளையும் சில போராட்டக்குழுவின் செய்திருந்தார்கள். அன்று காலையில் இருந்து கூடாரங்களில் இருந்த சிலர் மற்றவர்களிடம் விடைபெற்றுச் செல்வதையும் கவனிக்க முடிந்தது.
அந்தத் தருணத்தில் வெகு சிலர் மட்டுமே அதிபரின் செயலகத்தில் இருந்தார்கள். அந்தக் காட்சி நள்ளிரவு நேரத்தில் மாறியது.
ராணுவத்தின் நள்ளிரவு நடவடிக்கை
வியாழக்கிழமையன்று நள்ளிரவுக்குப் பிறகு செயலகத்தில் அதிக அளவு ராணுவம் குவிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அங்கு பிபிசி தமிழ் குழு அங்கு செய்தி சேகரிக்கச் சென்றது. முதலில் போராட்டக்காரர் ஒருவருடன் சில முகநூலில் நேரலை செய்தோம்.
அப்போது பெரிய எண்ணிக்கையிலான ராணுவத்தினர் எங்கும் தென்படவில்லை. ஆனால் ஆங்காங்கே கட்டடங்களுக்குப் பின்னாலும் கடற்கரையை ஒட்டிய சாலையிலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாக போராட்டக்காரர்கள் கூறினார்கள்.
முதல் நேரலையை முடிந்த சிறிது நேர இடைவெளியில் ராணுவத்தினர் சாலைகளில் படிப்படியாக அணிவகுக்கத் தொடங்கினார்கள். ஒரு சில நிமிடங்களில் வெவ்வேறு சாலைகளில் இருந்தும் ராணுவத்தினர் திரண்டு வந்தார்கள். கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக கொழும்பு நகரிலும் நாட்டின் பிற நகரங்களிலும் ராணுவத்தின் நடவடிக்கை இவ்வளவு தீவிரமாக இருந்ததில்லை.
கையில் இருந்த லத்திகளைக் கொண்டு சைகை செய்தபடியே கோட்டா கோ கம பகுதியை நோக்கி அனைவரையும் விரட்டிய ராணுவத்தினர். அதே நேரத்தில் பின்னிருந்து வந்த ராணுவத்தின் மற்றொரு குழுவினர் சாலையின் இருபுறங்களில் அமைக்கப்பட்டிருந்த கூடாரங்களை அடித்து உடைத்து, அகற்றினர். சில கூடாரங்களில் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினார்கள்.
ராணுவத்தினருக்கு மத்தியில் சீரூடை இல்லாமல் சாதாரண உடைகளில் இருந்த பலரைக் காண முடிந்தது. அங்கு நடந்த சம்பவத்தைப் படம் பிடிக்க அவர்கள் அனுமதிக்கவில்லை. கடுமையான குரலில் எச்சரிக்கும் தொனியில் அவர்கள் பேசினார்கள். ஊடகம் என்றும் பிபிசி என்றும் கூறிய போதும் அவர்கள் அதைப் பொருள்படுத்தவில்லை. அப்போதுதான் பிபிசி தமிழ் வீடியோ செய்தியாளர் ஜெரின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவம் முன்னேறி வந்தபோது பெண்கள், வயதானவர்கள், உள்ளிட்டோர் போராட்டக்காரர்களில் இருந்தார்கள் அனைவருமே கோட்டா கோ கம என்று அழைக்கப்படும் பகுதியை நோக்கி விரட்டிச் செல்லப்பட்டார்கள்.
அந்தத் தருணத்திலேயே ஜனாதிபதி செயலகத்துக்கு வரும் சாலைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற 24 மணி நேரத்துக்குள்ளாகவே ராணுவத்தின் உதவியுடன் தான் பணியாற்றப்போகும் அலுவலகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!