news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு

22 Jan, 2026
இலங்கையின் வரலாற்றில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை இன்று (22) நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, நுவரெலியாவில் இன்று காலை வெப்பநிலை 3.5°C ஆக பதிவாகியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு இலங்கையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையாக இது வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. இதேவேளை, பண்டாரவேலாவில் 11.5°C, பதுளையில் 15.1°C மற்றும் கட்டுகஸ்தோட்டையில் 15.9°C, மத்திய மற்றும் ஊவா மாகாணத்தின் பல பகுதிகளிலும் பரவலான குளிரான காலநிலை பதிவாகியுள்ளது. இலங்கை வரலாற்றில் கடும் குளிரான நாள் நுவரெலியாவில் பதிவு | Lowest Temperature Recorded In Sri Lanka S History எவ்வாறாயினும், வடக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் ஓரளவு வெப்பமான காலநிலை பதிவாகியுள்ளது. முல்லைத்தீவில் காலை நேரத்தில் அதிகபட்ச வெப்பநிலை 25.3°C ஆகவும், ஹம்பாந்தோட்டையில் 22°C ஆகவும், கொழும்பில் 22.1°C ஆகவும் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!