இவ்வாண்டு சுற்றுலாத்துறை வருவாய் 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை நெருங்குகிறது
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் சுற்றுலா வருமானம் 986.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.
ஜூன் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மூலம் இலங்கை 158.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் இலங்கையின் மதிப்பிடப்பட்ட சுற்றுலா வருமானம் வருடாந்தம் 45.1 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது.
மே மாதத்தில் சுற்றுலாத்துறையின் வருவாய் 131.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜூன் மாதத்தில் 100,388 சுற்றுலாப் பயணிகளை இலங்கை வரவேற்றுள்ளது.
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தற்காலிக தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 648,775 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வ்ருகைத் தந்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!