இஸ்ரேலின் பாதுகாப்பே எங்கள் முக்கியம் !! - ஜேர்மனி பகிரங்க அறிவுப்பு
இஸ்ரேலின் பாதுகாப்பே தனது வெளிவிவகார கொள்கையின் முக்கிய அம்சமாக காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜேர்மனி தனது கடந்த கால வரலாறே இதற்கு காரணம் எனவும் தெரிவித்துள்ளது.
எனினும் இஸ்ரேலிற்கு ஆயுதங்களை வழங்குவதன் மூலம் இனப்படுகொலைக்கு உதவுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டினை ஜேர்மனி நிராகரித்துள்ளது.
ஜேர்மனி இஸ்ரேலிற்கான ஆயுதவிநியோகத்தை நிறுத்தவேண்டும் என கோரும் வழக்கினை சர்வதேச நீதிமன்றில் நிக்கரகுவா தாக்கல் செய்துள்ளது.
இனப்படுகொலையை தடுப்பது சர்வதேச மனிதாபிமான சட்டம் மதிக்கப்படுவது தொடர்பான கடப்பாடுகளை ஜேர்மனி மீறிவிட்டது எனவும் நிக்கரகுவா குற்றம்சாட்டியுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஜேர்மனி சர்வதேசநீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.
எங்கள் வெளிவிவகார கொள்கையில் இஸ்ரேலின் பாதுகாப்புமிக முக்கியமானதாக காணப்படுவதற்கு காரணம் எங்களின் வரலாறு என ஜேர்மனியின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரி சர்வதேச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிற்கு ஜேர்மனி ஆயுதங்களையும் இராணுவதளபாடங்களையும் வழங்கியுள்ளது என தெரிவித்துள்ள அவர் ஆனால் நிக்கரகுவா அதன் அளவையும் நோக்கத்தையும் திரிபுபடுத்துகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி தனது கடந்தகாலங்;களில் இருந்து பாடங்களை கற்றுக்கொண்டுள்ளது அந்த கடந்தகாலம் மனித குலவரலாற்றில் மிகமோசமான குற்றங்களை உள்ளடக்கியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனி ஒவ்வொரு நாளும் காசாவிற்கு மனிதாபிமான உதவிகளை வழங்கிவருவதாகவும் அதிகாரியொருவர் சர்வதேச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!