news@ilakkiyainfo.com

பிரிவுகள்

இஸ்ரேலின் வடபகுதியை நோக்கி ரொக்கட் தாக்குதல்கள்

24 Sep, 2024
இஸ்ரேலின் வடபகுதியை இலக்குவைத்து ரொக்கட் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. முதலில் ஐந்து ரொக்கட்கள் வருவதை அறிந்து அவற்றில் சிலவற்றை இடைமறித்தோம்,சில ரொக்கட்கள் மனிதர்கள் இல்லாத பகுதிகளில் விழுந்து வெடித்தன என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதன் பின்னர் 50 ரொக்கட்கள் வருவதை அறிந்து இடைமறித்தோம்,ஆனால் சில கட்டிடங்களிற்கு சேதம் ஏற்பட்டுள்ளது தீ பரவல் இடம்பெற்றுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இதேவேளை வடக்கு இஸ்ரேலில் பல பாடசாலைகள் மூடப்பட்டதாக டைம்ஸ் ஒவ் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!