இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
8 மருத்துவபணியாளர்களின் உடல்களுடன் காசாவின் சிவில் பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் ஆறு பேரின் உடல்களையும் மீட்டுள்ளதாகவும் மீட்கப்பட்ட உடல்களில் ஐக்கிய நாடுகளின் ஊழியர் ஒருவரின் உடலும் உள்ளதாகவும் பாலஸ்தீன செம்பிறை சமூகம் தெரிவித்துள்ளது.
ஒரு மருத்துவபணியாளரை காணவில்லை என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பு தங்கள் மருத்துவ சகாக்கள் சடலங்களாக மீட்கப்பட்டமை குறித்து கடும் சீற்றம் வெளியிட்டுள்ளதுடன் இது எப்போது முடிவிற்கு வரும் என கேள்வி எழுப்பியுள்ளது.
நான் மனமுடைந்துபோயுள்ளேன், என தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவை சங்க மற்றும் செம்பிறை சங்கங்களின் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் ஜகன் சப்பகெய்ன் இந்த அர்ப்பணிப்புள்ள அம்புலன்ஸ் பணியாளர்கள் காயமடைந்த மக்களை காப்பாற்ற சென்றுகொண்டிருந்தார்கள், அவர்களின் வாகனங்கள் மீது இலச்சினை காணப்பட்டது அது அவர்களை பாதுகாத்திருக்க வேண்டும், அம்புலன்ஸ்களில் தெளிவாக செஞ்சிலுவை என குறிப்பிடப்பட்டிருந்தது, அவர்கள் அவர்களின் குடும்பத்தவர்களிடம் பாதுகாப்பாக போய் சேர்ந்திருக்கவேண்டும் ஆனால் அது நடைபெறவில்லை என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!