தி ஹண்ட் (The Hunt) தொடர் சொல்வதுபோல ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா?
24 Aug, 2026
1948 பிப்ரவரி 9 ஆம் திகதி வெளியான சிகாகோ டெய்லி ட்ரிப்யூனின் கூற்றுப்படி, “பலஸ்தீனப் பிரிவினைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் வாக்குகளை மாற்றுவதற்கு ஜனாதிபதி ட்ரூமன் தனது வெளியுறவுத்துறையினர் மீது முன்னெப்போதையும் விட கடுமையாக நெருக்குலை பியோகித்தார்” என்றும் “ட்ரூமன் வெள்ளை மாளிகைக்கு பொறுப்பான பிரதி செயலாளர் லோவெட்டை அழைத்து அமெரிக்காவுடன் பொதுவாக அணிசேரும் நாடுகள் ஆனால் பலஸ்தீன விடயத்தில் அவ்வாறு நடந்து கொள்ளத் தவறிய நாடுகளிடமிருந்து முழு விளக்கத்தைக் கோருங்கள்” என்று உத்தரவிட்டார்.
அக்காலத்தில் முதன்முதலாக, குறைந்தது 33 பலஸ்தீனிய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர், அதேநேரம், அடிப்படை அமெரிக்க கொள்கைகளுக்கும் அமெரிக்க நலன்களுக்கும் சியோனிசம் முரணானது என்று கருதி, அமெரிக்க வெளியுறவுத்துறை இந்த பிரிவினை திட்டத்தை கடுமையாக எதிர்த்தது.
அண்மிய கிழக்கு மற்றும் ஆபிரிக்க விவகாரங்களுக்கான வெளியுறவுத்துறை அலுவலகத்தின் இயக்குனர் லோய் ஹென்டர்சன், வெளியுறவுத்துறை செயலாளருக்கு எழுதிய குறிப்பில், “பிரிவினயை பலவந்தமாகவே செயல்படுத்த வேண்டும் காரணம் அது எந்தக் கொள்கையையும் அடிப்படைகளையும் கொண்டதல்ல" என்று அதில் அவர் வலியுறுத்தினார்.
ஜனாதிபதி ஹெரி ட்ரூமன், அனைத்து ஆலோசனைகளையும் புறக்கணித்து, காசாவில் இன்று பாலஸ்தீனர்கள் மீதான இனப்படுகொலையில் ஜனாதிபதி ஜோபைடன் இஸ்ரேலை ஆதரிக்கும் அதே விதத்தில் சியோனிஸ வாதிகளை அன்றுஆதரித்தார்.
இரண்டாம் உலகப் போரின் புகழ்பெற்ற தளபதியும் இராணுவ திட்டத்தின் வடிமைப்பாளருமான ட்ரூமனின் வெளியுறவுத்துறை செயலர் ஜோர்ஜ் மார்ஷல், “ஒரு சில வாக்குகளை வெல்வதற்கான வெளிப்படையான ஏமாற்று வித்தை" என்று கூறியதை ட்ரூமன் கண்டித்தார், இது ஜனாதிபதி அலுவலகத்தின் பெரும் கண்ணியத்தை கடுமையாக மழுங்கச் செய்யும் என்றார்".
முன்னாள் வெளியுறவுத்துறை துணைச் செயலாளர் டீன் அச்சனும் சியோனிசத்தை வன்மையாக எதிர்த்தார். அவர் “மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலுக்கு அதிகவிலை கொடுக்க நேரிடும் என்று கவலைப்பட்டார்".
வெளியுறவுத்துறையின் கிழக்கத்திய விவகாரங்களின் பிரிவின் தலைவர் கோர்டன் பி.மரியம், தார்மீக அடிப்படையில் பிரிவினை திட்டத்திற்கு எதிராக எச்சரித்தார். அந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வாக பலஸ்தீனப் பிரிவினையை அரபு மற்றும் யூதர்களின் ஒப்புதலின் அடிப்படையில் மட்டுமே நியாயப்படுத்த முடியும் என்றும் குறிப்பிட்டார்.
கருத்தியல் ரீதியாக பிளவுபட்டிருந்த அமெரிக்காவும் அன்றைய சோவியத் யூனியனும் பலஸ்தீனத்தில் சியோனிச அரசை உருவாக்குவதில் ஒருபோராட்ட முனையில் ஒற்றுமையுடன் போராடும் தோழர்களைப் போல ஒன்றாக இணைந்து நின்றன. இது இரண்டு வல்லரசுகள் மீதும் மற்றும் உலகம் முழுவதும் யூதர்களுக்கு எந்த அளவுக்கு ஆற்றல் மிக்க கட்டுப்பாடு இருந்தது என்பதைக் காட்டுகிறது.
இப்பின்னணியில் தான் 1947நவம்பர் 29 அன்று, ஐ. நா. அதன் சொந்த சாசனத்தயே மீறும் வகையில் பலஸ்தீனத்தின் பிரிவினைக்கு ஆதரவாக வாக்களித்தது. அன்று முன்மொழியப்பட்ட யூத அரசில் இருந்த 1,008,900 மொத்த மக்கள் தொகையில், அரபு-யூத விகிதம் 499,020க்கு509,780 என்ற ரீதியில் தான் இருந்தது.
பலஸ்தீனியர்கள் தங்கள் நாட்டை இரண்டு பகுதிகளாகப் பிரிப்பதற்கான ஐ.நா.தீர்மானத்தை நிராகரித்தனர், ஏனெனில் அது அவர்களின் சொந்த தாய்நாட்டை இரண்டாகக் கூறுபோடும் விடயமாக இருந்தது.
நியாயமான அனைத்து சிந்தனையாளர்களிடமிருந்தும் இந்த அநீதிக்கு எதிரான பரவலான கண்டனங்கள் எழுந்தன. அதன் விளைவு இன்றும் ஐ.நா.வில் மிகவும் கண்டிக்கப்பட்ட நாடாகவே இஸ்ரேல் உள்ளது.
அல்பர்ட் ஈன்ஸ்டன் “இராணுவ மயப்படுத்தப்பட்ட யூத கருதத்தியலை தழுவவில்லை. பலஸ்தீன அரபு மக்களின் குடியுரிமைகளை மீறும் வகையில், அவர்களது காணிகளை கொள்ளையிடும் வகையில் அல்லது அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் வகையில் யூத நாடு அமையும் என்பதால் அவர் அதை ஏற்கவில்லை” என்று குறிப்பிடுகின்றார்.
“இந்த யூத நாட்டு கருத்தியல் எனது இதயத்தோடு ஒத்துப் போகவில்லை. ஏன்னுடைய இதயத்தின் படி அது ஏன் தேவைப்படுகின்றது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அது பல கஷ்டங்களோடும் குறுகிய மனப்பாங்கோடும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அது மோசமானது என்றும் நான் நம்புகின்றேன்று சுட்டிக்காட்டியுள்ளார் அல்பர்ட் ஈன்ஸ்டன்.
லத்தீப் ஃபரூக்-
The Creation of Israel in 1948 | History, Overview & Reasons
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!