Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
ஹூஸ்னி முபாரக்
அமெரிக்கா தலைமையிலான மேற்குலகும், இஸ்ரேலும் ஜனநாயகத்தை தவிடுபொடியாக்குவதற்காக அரேபிய சர்வாதிகாரிகளைப் பயன்படுத்தி வருகின்றன.
உதாரணமாக, 2011 ஆம் ஆண்டு அரபு எழுச்சியை அடுத்து எகிப்திய மக்கள் முப்பது ஆண்டுகளுக்கும் மேலான கெடுபிடிமிக்க சர்வாதிகாரி ஹூஸ்னி முபாரக்கை தூக்கியெறிந்தனர்.
அறுபது ஆண்டுகளுக்குப் பின் நடந்த சுதந்திரமான, நியாயமான தேர்தல்களினூடாக இஸ்லாமிய பின்னணியினைக் கொண்ட முஹம்மட் முர்ஸியை மக்கள் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்தனர்.
இதனால் உஷாரான மேற்குலகும் இஸ்ரேலும் இந்த ஆட்சியை கவிழ்த்து, தனது எஜமானர்களுக்கு பணிவுடன் சேவை செய்யக்கூடிய மற்றொரு சர்வாதிகாரி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசியை ஆட்சியில் அமர்த்துவதற்காக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் குவைத் ஆகிய நாடுகளை ஈடுபடுத்தி பதினொரு பில்லியன் டொலர்களை செலவழிக்க வைத்தன.
இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தைக் கண்டித்து, கொலைகளையும் அழிவையும் நிறுத்தக் கோரி உலகளாவிய ரீதியில் மக்களால் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இது கிழக்கே இந்தோனேஷியா, மலேஷியா முதற்கொண்டு ஏறக்குறைய அனைத்து மேற்குலகத் தலைநகரங்களையும் உள்ளடக்கியிருந்தது.
இது போன்ற ஆர்ப்பாட்டம் ஒன்று சியோனிசத்தை எதிர்க்கும் யூதர்களால் கூட வொஷிங்டனில் நடத்தப்பட்டது.
எனினும், மத்திய கிழக்கில் ஆட்சியிலுள்ள கொடுங்கோலர்கள் அனுமதிக்காத காரணத்தினால் பெரிய அளவிலான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் அங்கு இடம்பெறவில்லை.
மாறாக, அக்டோபர் 8 ஆம் திகதி முதல் நீர், உணவு மற்றும் மருந்துவகைகள் எதுவுமே இல்லாத சூழ்நிலையில் பலஸ்தீனர்கள் பரிதவிக்கும் போது முன்பு சூடானில் உள்நாட்டு நெருக்கடியைத் தூண்டி கிட்டத்தட்ட அந்நாட்டையே கொலைக்களமாக மாற்றிய ஐக்கிய அரபு இராச்சியம், பத்து ட்ரக்குகளில் புத்தம் புதிய உணவு வகைகளை இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்தது.
இந்த இனப்படுகொலையானது இதுவரை முழுமையாக 2.3 மில்லியன் பலஸ்தீனர்களையும் பாதித்துள்ளது.
கிழக்கயல் நாடுகளிலுள்ள பலஸ்தீன அகதிகளுக்குரிய ஐக்கிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கான முகவரகத்தின் ஆணையாளர் நாயகமாக 2020ஆம் ஆண்டு முதல் பணியாற்றுகின்ற ஜெனரல் பிலிப் லஸ்ஸாரினி, பலஸ்தீனர்கள் அனுபவிக்கும் துன்பங்களைப் பற்றி கூறும் போது,
'பலர் உடலியல், உளவியல் ரீதியாக வாழ்நாள் முழுவதும் வடுக்களை சுமப்பார்கள். குழந்தைகள் உட்பட பெரும்பாலானோர் ஆழ்ந்த அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர், குறிப்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டும், ஊனமுற்றும், அனாதைகளாகவும் ஆக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியளிக்கின்றது.'
'அவர்களின் எதிர்காலம் நீண்டகால பாதக விளைவுகளுடன் கூடிய பேராபத்தில் உள்ளது,' காஸாவின் நெருக்கடியானது, 'மனிதாபிமானமற்ற மொழிப்பிரயோகம், உணவு, நீர் மற்றும் எரிபொருளை போர்க் கருவிகளாகப் பயன்படுத்துகின்ற, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு ஆகும்.' பலமுறை கோரிக்கை விடுத்த போதிலும், காஸாவில் மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கவும், உணவு, மருந்து, நீர் மற்றும் தங்குமிடம் ஆகியவற்றைப் பாதுகாப்பாக வழங்கவுமான மனிதாபிமான போர் நிறுத்தம் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை'.
'குளிர்காலம் ஆரம்பிப்பதானது, குறிப்பாக திறந்த வெளியில் வசிப்பவர்களின் வாழ்க்கையை மென் மேலும் தாங்க முடியாததாக ஆக்கும்' என்றார்.
எமது UNRWA சகபாடிகள் 146 பேர் உட்பட மருத்துவர்கள், பத்திரிகையாளர்கள், உதவிப் பணியாளர்கள் மற்றும் குழந்தைகளும் கொல்லப்பட்டுள்ளனர், யாரும் விட்டுவைக்கப்படவில்லை' என்று அவர் மேலும் கூறினார்.
இவ்வளவு நடந்தும் கூட அரேபிய சர்வாதிகாரிகளின் இதயங்கள் உருகத் தவறிவிட்டன.
சவூதி அரேபியாவும், எண்ணெய் வளம் மிக்க வளைகுடா நாடுகளும் குறைந்த பட்சம் நீர், உணவு மற்றும் மருந்துப் பொருட்களையாவது வழங்க வேண்டும் என்று உலக முஸ்லிம்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மாறாக, அவர்கள் காஸாவை ஒரு கொலைக்களமாக மாற்ற இஸ்ரேலியர்களின் பக்கம் சார்ந்து நின்றார்கள்.
உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களை நிராகரித்து, சவூதி அரேபியா ரியாத்தில் 2023 டிசம்பர் 14- 16, தினங்களில்‘MDLBEAST Soundstorm’ எனும், மத்திய கிழக்கின் மிகப்பெரிய இசைக்களியாட்டத்தை நடத்தியது.
மேலும் இஸ்லாத்தில் இருந்து தூர விலகிய இங்கிலாந்திற்கான சவூதி தூதுவர் காலித் பின் பந்தர் அல் சௌத், 'எனது அரசாங்கம் ஒருபோதும் மதத் தலைமைத்துவத்திற்கு உரிமை கோரவில்லை' என்றார்.
காஸாவில் இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனத்தை வெளிப்படையாக ஆதரிக்கின்ற ஜேர்மனி, பலஸ்தீனர்களை இஸ்ரேல் படுகொலை செய்வதற்கு பக்கபலமாக இருந்ததற்காகவும், இஸ்ரேலுடன் உறவுகளைத் தொடர ஆர்வம் கொண்டிருப்பதற்கும் வெகுமதியாக சவூதி அரேபியாவிற்கான ஆயுத விநியோகத்தை மீண்டும் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளது.
1947 இல், பலஸ்தீனத்திற்கான ஐக்கிய நாடுகளின் பிரிவினைத் திட்டத்திற்கு எதிராக சவூதி அரேபியா வாக்களித்தது.
எவ்வாறாயினும், இஸ்ரேல் - சவூதி இணக்க நிலை இன்றி சவூதி ஆட்சி இரண்டு வாரங்களுக்கு மேல் நீடிக்க முடியாது என்று இரு தரப்பு மத்தியஸ்தராக பணியாற்றிய முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியது போலவே தற்போதும் அமெரிக்காவுடன் இஸ்ரேலிய - சவூதி இயல்புநிலைக்கான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இதை உறுதிப்படுத்தும் சவுதி வெளியுறவு அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் ஜனவரி 16 ஆம் திகதி டாவோஸில் நடந்த உலக பொருளாதார மன்றக் குழுவிடம், 'பிராந்திய அமைதி என்பது இஸ்ரேலுக்கான அமைதியையும் உள்ளடக்கியது என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்,
ஆனால், அது பலஸ்தீன அரசின் ஊடாக பலஸ்தீனர்களுக்குக் கிடைக்கும் அமைதியின் மூலம் மட்டுமே சாத்தியமாகும்' என்றார். அவரிடம், 'அவ்வாறு இடம்பெற்றால் சவூதி அரேபியா இஸ்ரேலை ஒரு பரந்த அரசியல் உடன்படிக்கையின் ஒரு பகுதியாக அங்கீகரிக்குமா?' என வினவப்பட்டது. அதற்கு அவர், 'நிச்சயமாக' என்றார்.
அரபு சர்வாதிகாரிகளின் போலித் தன்மையை அம்பலப்படுத்திய எகிப்துக்கான இஸ்ரேலின் முன்னாள் துணைத் தூதர் ரூத் வாசர்மன் லாண்டே, 'மிட்ல் ஈஸ்ட் மொனிட்டர்ஸ்' அமைப்பின் கூற்றுப்படி, ஐக்கிய அரபு இராச்சியம்;, சவூதி அரேபியா போன்ற அரபு நாடுகள் காஸா பிரச்சினை குறித்து முரண்பாடான கருத்துக்களைக் கொண்டுள்ளன.
இந்த நாடுகள் காஸாவில் போர்நிறுத்தத்தை வரவேற்கவில்லை என்றும், அவர்களது தனிப்பட்டதும் பொது செயற்பாடுகளும் இணங்கிப்போகவில்லை என்றும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள மக்கள் இந்த போலித்தன்மையையும் துரோகத்தையும் தெளிவாக அறிந்துவைள்ளனர்.
இதன் விளைவாக அப்பிராந்தியம் முழுவதும் வெடித்துச் சிதறப் போகும் எரிமலையாய் குமுறிக் கொண்டிருக்கின்றது.
காஸா மற்றும் மேற்குக் கரையில் பலஸ்தீனர்கள் மீதான அமெரிக்க - ஐரோப்பிய - இஸ்ரேலிய காட்டுமிராண்டித்தனம் இவ் வெடிப்புக்கான ஆரம்ப தூண்டலை கொடுத்துவிடுமா என்பதே கேள்விக்குறியாகும்.
லத்தீப் பாரூக்
(தமிழில்: பிஷ்ருன் நதா மன்சூர்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!