இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
அமெரிக்க ஜனாதிபதி மற்றும் இராஜாங்க செயலாளரின் இஸ்ரேலிற்கு வலுவான ஆதரவை தெரிவிக்கும் செய்திகள் ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொள்வதை தடுக்ககூடும் என அமெரிக்கா எதிர்பார்க்கின்றது.
ஈரான் இஸ்ரேலின் இலக்குகளை தாக்கினால் அது மிக நீண்டகால யுத்தமொன்றை ஆரம்பித்துவைக்கும் இதுவரை இஸ்ரேல் ஈரான் இடையிலான மோதல்கள் ஒரு மறைமுக யுத்தமாகவே காணப்பட்டன.
மோதல்கள் தீவிரமடைவது எவரினது நலனிற்கும் உகந்த விடயமல்ல ஈரான் தாக்குதலை மேற்கொள்வதை தடுத்து நிறுத்தவேண்டும் என அன்டனி பிளிங்கென் துருக்கி சீன சவுதிஅரேபியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய வெளிவிவகார அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஈரான் தாக்குதலை மேற்கொண்டால் அமெரிக்காவின் மிகவும் உறுதியான ஆதரவு இஸ்ரேலிற்கு கிடைக்கும் என ஜோபைடன் உறுதியளித்துள்ள அதேவேளை இஸ்ரேலிற்கு ஆதரவளிப்பதற்காக அன்டனி பிளிங்கென் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டுள்ளார்.
ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதலை மேற்கொண்டால் மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடிப்பதையும் பிராந்தியத்தில் அமெரிக்காவின் படையினரை குறிப்பிடத்தக்க அளவிற்கு பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படுவதையும் உறுதி செய்வதற்காக இஸ்ரேல் நிதானத்தை கடைப்பிடிக்கவேண்டும் எனவும் அமெரிக்கா கேட்டுக்கொள்ளும்.
எனினும் ஈரானின் தாக்குதல் காரணமாக இஸ்ரேலிற்கு குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டால் கடுமையான பதில் தாக்குதலை மேற்கொள்வதற்கான உரிமை இஸ்ரேலிற்கு உள்ளது என பைடன் நிர்வாகம் கருதுகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!