12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
ஒப்பந்தத்தின் சில விவரங்கள் இறுதி செய்யப்பட்டு வருவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்
இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலகும்
ஹமாஸ் 94 பணயக்கைதிகளை கொண்டிருப்பதாகவும், அதில் 34 பேர் இறந்திருக்கலாம் என்று கருதப்படுவதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. மேலும், போருக்கு முன்பாக இஸ்ரேலை சேர்ந்த நான்கு பேர் கடத்தப்பட்டுள்ளனர், அதில் இருவர் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கிறது.
ஆறு வார கால முதல் கட்ட போர் நிறுத்தம் தொடங்குவதற்கு முன்பாக, இருபுறத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று கத்தார் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். இந்த போர் நிறுத்தத்தின்போது, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 33 பணயக்கைதிகள் விடுவிக்கப்படுவர், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகள் விடுவிக்கப்படுவர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மக்கள் அதிகமாக வாழும் காஸாவின் பகுதிகளிலிருந்து விலகி கிழக்கு திசையில் இஸ்ரேல் படை நகரும். இடமாற்றம் செய்யப்பட்ட பாலத்தீனர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுவர், மக்களுக்குத் தேவையான உதவிகளை கொண்டு வரும் நூற்றுக்கணக்கான லாரிகள் ஒவ்வொரு நாளும் உள்ளே வர அனுமதிக்கப்படும்.
இந்த ஒப்பந்தம், பணயக்கைதிகளை தங்கள் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கும் என, ஜோ பைடன் தெரிவித்துள்ளார்
அடுத்த கட்ட போர் நிறுத்தத்தின்போது என்ன நடைபெறும்?
இரண்டாம் கட்ட போர் நிறுத்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் இன்று (ஜனவரி 16ம் தேதி) தொடங்கவுள்ளன. இந்த போர் நிறுத்தத்தின்போது மீதமுள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டு, இஸ்ரேல் படைகள் முழுவதுமாக விலகி, அந்த பகுதியில் 'நீடித்த அமைதி' நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மூன்றாவது மற்றும் கடைசி கட்ட போர் நிறுத்தத்தின்போது காஸாவின் மறுகட்டமைப்பு நடைபெறும் - இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். மேலும், மீதமுள்ள பணயக்கைதிகளின் உடல்கள் இருந்தால் அவை திருப்பி கொடுக்கப்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையை மேற்கொள்ள 'தெளிவான நடைமுறை' இருப்பதாக, ஷேக் முகமது தெரிவித்தார். இதன் "விவரங்கள் இறுதி செய்யப்பட்ட பிறகு, ஓரிரு நாட்களில்" ஒப்பந்தம் வெளியாகும் என்று தெரிவித்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ், ஒப்பந்தத்தின்படி தங்கள் பொறுப்புகளை சரியாக மேற்கொள்கிறார்கள் என்பதை உறுதி செய்ய, இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உதவிய கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகியவை கூட்டாக வேலை செய்யும்.
"இதுவே போரின் கடைசி பக்கமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை அமல்படுத்த அனைத்து தரப்பும் ஒத்துழைக்கும் என்று நம்புகிறோம்" என்றார் ஷேக் முகமது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!