மூன்று காரணங்கள்: சூயஸ் கால்வாயை மீட்பது, எகிப்து அதிபரை பணியவைப்பது, அரபு தேசங்களுக்கும் ஐரோப்பாவின் மீது நிரந்தரமான பயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது. (நிலமெல்லாம் ரத்தம் - 67)
29 Oct, 2026
ஹமாஸ் தாக்குதலில் இதுவரை இறந்த இஸ்ரேலியர்கள்
புதிதாக இதையெல்லாம் பார்க்கும் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கும். ‘இப்படிப்பட்ட அபாயங்களுக்கு மத்தியில் ஒரு நிமிடம்கூட இருக்கக்கூடாது’ என்று தோன்றும்.
ஆனால், இஸ்ரேலியர்கள் குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே இதையெல்லாம் பார்த்துப் பழகி வளர்ந்ததால், அவர்களை இந்த எதுவும் பாதிப்பதில்லை. இதையெல்லாம் கடந்து வாழப் பழகிவிடுகிறார்கள்.
நமக்கு துப்பாக்கியுடன் திபுதிபுவென ராணுவ வீரர்கள் கூட்டமாக வீதிக்குள் ஓடிவந்து யாரையாவது சுடுவதைப் பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கும், மயக்கமே வந்துவிடும்.
பாலஸ்தீனத்தில் இருக்கும் ஒரு குழந்தைக்கு இது பழகிப் போன காட்சி. கிட்டத்தட்ட தினம் தினம் இதைப் பார்த்து வளர்கிறது அந்தக் குழந்தை.
இதேபோல இஸ்ரேலில் இருக்கும் பலருக்கும், வானத்தில் தீப்பிழம்பாக ஓர் ஏவுகணை வந்து பாய்வது சாதாரணக் காட்சி. தங்கள் கண்ணெதிரே ஒரு பேருந்து குண்டுவெடித்து உருக்குலைவது இயல்பான விஷயம்.
இன்று அப்படி ஒரு காட்சியைப் பார்த்தாலும், நாளை தயக்கமின்றி பேருந்தில் ஏறிப் பயணம் செய்வார்கள். தாக்குதல், வன்முறை, அச்சம் ஆகியவற்றுக்கு மத்தியில் வாழ்வதற்கு நிரந்தரமாக அந்த மக்கள் பழகியிருக்கிறார்கள்.
இத்தனைக்கும் மத்தியில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதற்குக் காரணம், அது பலமான தேசம் என்பது அல்ல! எதிரிகளை பலவீனப்படுத்தி தன்னை வலிமையாகக் காட்டிக்கொண்டதுதான்.
ராணுவ வல்லமை, ஆயுத வல்லமை, உளவு வல்லமை ஆகியவற்றால் அது தன் எதிரி நாடுகளுக்கு நிரந்தர அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகளிடம் அது செல்லுபடி ஆகவில்லை என்பது வேறு விஷயம்.
இஸ்ரேல் என்ற நாடு உருவெடுப்பதற்கு முன்பாகவே அந்த நாட்டின் ராணுவம் உருவாகிவிட்டது என்பது ஆச்சர்யமான விஷயம்.
பிரிட்டிஷ் பிடிக்கு பாலஸ்தீனம் வருவதற்கு முன்பே அங்கு அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் நடக்க ஆரம்பித்தன.
யூதர்களின் பாதுகாப்புக்காக Hashomer என்ற அமைப்பு உருவானது. கிட்டத்தட்ட ராணுவம் போலவே இதை யூத இனத்தைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களும் அரசியல் செல்வாக்குள்ளவர்களும் இணைந்து நடத்தினர். இதற்கென்று தனியாக ஓர் உளவுத்துறையும் இயங்கியது.
ஹமாஸ் அமைப்பால் கடத்தப்பட்ட இஸ்ரேலியர்களின் உறவினர்கள்
இதேபோல முதல் உலகப்போர் காலத்தில் யூதர்களைக் கொண்டு Zion Mule Corps, Jewish Legion ஆகிய துணை ராணுவ அமைப்புகளை உருவாக்கி தங்கள் ராணுவத்துடன் பயன்படுத்திக் கொண்டது பிரிட்டிஷ் அரசு. பிற்காலத்தில் அதில் இருந்தவர்களை இணைத்து Haganah என்ற ராணுவத்தை யூதர்கள் உருவாக்கினர்.
இஸ்ரேல் தேசம் உருவானதுமே, இந்த எல்லாவற்றிலும் இருந்தவர்களை இணைத்து இஸ்ரேல் ராணுவம் ஏற்படுத்தப்பட்டது.
இன்றைய தேதியில் உலகின் வலிமையான ராணுவங்கள் பட்டியலில் 18-வது இடத்தில் இருக்கிறது இஸ்ரேல்.
மத்தியக் கிழக்கு ஆசியாவில் துருக்கி, எகிப்து, ஈரான் போன்ற நாடுகளின் ராணுவங்களில், இஸ்ரேலைவிட வீரர்கள் எண்ணிக்கை அதிகம். ஆனாலும், நவீன ஆயுதங்கள் மற்றும் போர்முறையால் இஸ்ரேல் தனித்து நிற்கிறது.
எப்போதும் முற்றுகையில் இருக்கும் ஒரு தேசத்துக்கு ராணுவ பலம் முக்கியம் அல்லவா? இஸ்ரேலைப் பொறுத்தவரை அதற்குப் பஞ்சமே இல்லை.
இஸ்ரேல் குடிமக்கள் எல்லோரும் 18 வயது நிரம்பியதும் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும்.
ஆண்கள் 32 மாதங்களும், பெண்கள் 24 மாதங்களும் ராணுவப் பணியில் இணைந்திருக்க வேண்டும். ஆண்களைப் போலவே பெண் வீராங்கனைகளையும் போர்முனைக்கு அனுப்பும் வெகுசில நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று!
ராணுவத்தில் கிட்டத்தட்ட 88% பணிகளில் பெண்களும் பங்குபெறுகிறார்கள். கடந்த 1962 முதல் 2016 வரை இஸ்ரேல் ராணுவ வீராங்கனைகளில் 535 பேர் போர்முனையில் இறந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர்களில் நிரந்தரமாக ராணுவத்தில் இணைய விரும்புவோர், அதன்பின் முறைப்படி சேர்ந்துகொள்ள முடியும்.
கட்டாய ராணுவ சேவையை முடித்துவிட்டு வெளியேறியவர்களில் சிலரை 'ரிசர்வ் சர்வீஸ்' என்ற பிரிவில் வைத்திருப்பார்கள்.
அவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஒரு மாதம் மட்டும் வந்து ராணுவப் பயிற்சி பெற்று, சிலவித ராணுவப் பணிகளைச் செய்துவிட்டுப் போவார்கள். எந்த நேரமும் போருக்குத் தயாராக இவர்கள் இருப்பார்கள்.
இஸ்ரேல் ராணுவம்
இஸ்ரேல் ராணுவத்தில் இப்போது 1,69,500 பேர் முழுநேரப் பணியில் இருக்கிறார்கள். இவர்களைத் தாண்டி 4,65,000 பேர் ரிசர்வ் சர்வீஸில் இருக்கிறார்கள்.
எந்த நேரத்திலும் இவர்களைக் களத்துக்கு அழைக்க முடியும் என்பதால்தான், ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களில், காஸா எல்லையில் மூன்று லட்சம் வீரர்களை இஸ்ரேலால் குவிக்க முடிந்தது.
கவச வாகனங்கள், டாங்கிகள், ராக்கெட் லாஞ்சர்கள் என்று உலகின் அதிநவீன ராணுவத் தளவாடங்களைக் குவித்து வைத்திருக்கிறது இஸ்ரேல் தரைப்படை. கடற்படையும் ஐந்து நீர்மூழ்கிக் கப்பல்கள், விமானம் தாங்கிக் கப்பல் என்று பெரிதுதான்.
தேவைப்படும்போது அமெரிக்க கடற்படை உதவிக்கு வந்த நிற்கும். விமானப்படையில் F-15, F-16, F-35 என்று அதிநவீன விமானங்கள் 350 உள்ளன. இதுதவிர, ஹெரோன் எனப்படும் தாக்குதல் நடத்தும் டிரோன் படையும் அவர்களிடம் இருக்கிறது.
இஸ்ரேலின் இன்னொரு ஸ்பெஷல் அம்சம், Iron Dome எனப்படும் அதன் தற்காப்புக் கவசம். குறுகிய ரேஞ்சில் இயங்கும் ஏவுகணைகளை ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள் ராக்கெட் தாக்குதல் நடத்தினால், அவற்றை வானிலேயே வழிமறித்து அழிக்கும் தொழில்நுட்பம் இது.
ஆனால், சமீப தாக்குதலில் குறுகிய காலத்துக்குள் அதிக ராக்கெட்களை ஏவி இதைத் தடுமாற வைத்து ஜெயித்தது ஹமாஸ். இதேபோல நீண்ட தூரத்திலிருந்து ஏவப்படும் ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் David's Sling, Arrow system போன்றவற்றையும் நிறுவியுள்ளது இஸ்ரேல். ஈரானோ, சிரியாவோ திடீரென தாக்கினாலும் பாதுகாக்க இந்த ஏற்பாடுகள்.
காஸாவின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்
வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், இஸ்ரேலிடம் அணு ஆயுதங்களும் இருக்கின்றன. சுமார் 100 முதல் 400 வரையிலான அணு ஆயுதங்கள் அதனிடம் இருக்கலாம் என்று கணிப்பு சொல்கிறார்கள். நீர்முழ்கிக் கப்பலில் இருந்துகூட அணு ஆயுதங்களை ஏவுவதற்கு இஸ்ரேலால் முடியும்.
Also Read
இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம் 8: சமாதானத்துக்கான ஆலிவ் இலையை ஏந்தியவர் - யாசர் அராபத்தின் நிராசை!
இஸ்ரேல் இவ்வளவு தூரம் ராணுவ வல்லமை பெற்றதற்குக் காரணம், அமெரிக்கா. எண்ணெய் வளம் கொழிக்கும் சவுதி அரேபியா, குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகள் ஒரு பக்கம்... அடிப்படைவாத அமைப்புகள் வளரும் களமாக இருக்கும் சிரியா, இராக், ஈரான் என்று மத்தியக் கிழக்கு ஆசியா விசித்திரமானது. அமெரிக்காவுக்கு இணக்கமான நட்பு நாடுகள் பல இருந்தாலும், எந்த நேரத்தில் யார் எதிராகத் திரும்புவார்கள் என்று சொல்ல முடியாது.
அதனால், இந்தப் பகுதியைக் கண்காணிக்கும் தனது விசுவாசியாக இஸ்ரேலை வைத்திருக்கிறது அமெரிக்கா. Foreign Military Financing என்ற திட்டத்தில் பல நாடுகளுக்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் செய்கிறது.
அந்தப் பட்டியலில் முதலிடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளில் இஸ்ரேலுக்கு சுமார் 4 லட்சத்து 83 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு ராணுவ உதவி செய்துள்ளது அமெரிக்கா.
இஸ்ரேலின் ராணுவத் தொழில்நுட்பமும் உலகப்புகழ் பெற்றது. துப்பாக்கிகள், மெஷின் கன்கள், ராக்கெட்கள், ராணுவக் கவச வாகனங்கள், டாங்கிகள், சிறு ரக போர் விமானங்கள், ராணுவ டிரோன்கள், ராணுவத் தகவல்தொடர்பு தொழில்நுட்பக் கருவிகள், ராக்கெட் தாக்குதல் தடுப்புக் கவச அமைப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறைய தொழிற்சாலைகள் இஸ்ரேலில் உள்ளன. உலகின் பல நாடுகளுக்கு இவற்றை விற்று பெருமளவில் இஸ்ரேல் சம்பாதிக்கிறது.
தாக்குதல் நடத்த கிளம்பும் இஸ்ரேல் டாங்கிகள்
இஸ்ரேலிடம் அதிகம் ஆயுதங்கள் வாங்குவது இந்தியாதான். என்னதான் அமெரிக்காவின் ஆசிய அடியாளாக இஸ்ரேல் இருந்தாலும், ரஷ்யா அந்த நாட்டிடம்தான் டிரோன்கள் வாங்குகிறது.
இன்னொரு பக்கம் சீனாவுக்கு அதிகமாக ஆயுதங்கள் விற்கும் நாடுகள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் இஸ்ரேல் இருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலின் கஸ்டமர்கள்.
'இப்படி உலகத்துக்கே ஆயுதங்கள் விற்கும் நாட்டுடன் நமக்கு எதற்கு வம்பு? இஸ்ரேலை சீண்டினால் அமெரிக்காவின் கோபத்தை சம்பாதிக்க நேரிடும்' என்று பெரும்பாலான அரபு நாடுகள் அதனுடன் சமாதானமாகப் போய்விட்டன.
அதனால், மரபுசார்ந்த ராணுவத் தாக்குதல் நடத்தும் போர்களை இனி செய்ய வேண்டியிருக்காது என்றே அந்த நாடு நம்புகிறது. அவர்களுக்குத் தலைவலியாக இருப்பது ஹமாஸ், ஹிஸ்புல்லா போன்ற அமைப்புகள்தான்.
Israeli Prime Minister Benjamin Netanyahu
உலகின் மிகச் சிறந்த உளவு அமைப்பை வைத்திருக்கும் இஸ்ரேல், இவர்கள் விஷயத்தில்தான் தடுமாறுகிறது. இஸ்ரேலின் அந்த உளவு அமைப்புகளின் கரங்கள் உலகம் முழுக்க நீண்டிருக்கின்றன.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!