சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
30 Oct, 2026
இஸ்ஃபஹான் நிலையத்தில் நான்கு கட்டடங்கள் வெளிப்படையாக சேதமடைந்துள்ளன. ஃபோர்டோவ் நிலையத்திற்கு, எந்தத் தீங்கும் ஏற்படவில்லை, அதைத் தாக்குவது ஒரு சவால் மிக்க காரியம் என்று கூறினார்.
இத்தாக்குதல்களைத் தொடர்ந்து வியன்னாவில் நடந்த சர்வதேச அணுசக்தி முகவரகத்தின் அவசரகால அமர்வில் பேசிய அவர், சேதமடைந்த நடான்ஸ் தளத்திலிருந்து கதிர்வீச்சு மற்றும் இரசாயன மாசுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனாலும் நடான்ஸ், இஸ்ஃபஹான் அணுசக்தி தளங்களுக்கு வெளியே கதிர்வீச்சு அளவுகள் சாதாரணமாகவே காணப்படுகிறது என்றுள்ளார்.
இந்நிலையங்கள் மீதான ஒவ்வொரு தாக்குதல்களின் பின்னரும் அணுசக்தி முகவரகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்த கூற்றுக்கள் அந்நிலையங்கள் மீது இஸ்ரேல் மீண்டும் மீண்டும் தாக்குதல்கள் நடத்த துணைபுரிகின்றனவா என்ற கேள்வியையும் பரவலாக ஏற்படுத்தியது. இந்நிலையங்கள் மீதான தாக்குதல்களுக்கும் க்ரோஸியின் அறிவிப்புகளுக்கும் இடையில் தொடர்பு இருக்கலாமோ என்ற ஐயமும் நிலவவே செய்கிறது.
[caption id="attachment_277787" align="alignnone" width="1024"]
Fordo [/caption]
இவ்வாறு உச்சபட்ச கொதிநிலையடைந்துள்ள ஈரான் அணுசக்தி திட்டத்தின் இரண்டாவது முக்கிய தளமான ஃபோர்டோ எரிபொருள் செறிவூட்டல் நிலையம் தெஹ்ரானுக்கு தென்மேற்கே சுமார் 95 கிலோ மீற்றர் தூரத்தில் காணப்படும் ஹசன்அகா மற்றும் ஃபோர்டோ மலை சிகரங்களுக்கு இடையில் ஆழமான பள்ளத்தாக்கில் 80-90 மீற்றர் (260-300 அடி) வரையான ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
வான்வழித் தாக்குதல்கள் மற்றும் பதுங்குகுழிகளை தாக்கியழிக்கும் குண்டுகளில் இருந்து பாதுகாப்பு பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இது அமைக்கப்பட்டுள்ள இந்நிலையத்தின் நிர்மாணப்பணிகள் 2006 அளவில் தொடங்கியதாக நம்பப்படுகிறது. இது 2009 இல் செயற்பாட்டுக்கு வந்ததோடு அதனை ஈரான் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொண்டது.
இவ்வாறு ஆழத்தில் அணுசக்தி செறிவூட்டல் நிலையத்தை ஈரான் அமைப்பதற்கு காரணம் இல்லாமல் இல்லை என்பதே ஆய்வாளர்களின் கருத்தாகும்.
அதாவது 1981 இல் ஈராக்கின் அணுசக்தி நிலையத்தின் மீது இஸ்ரேல் திடீரென தாக்குதல் நடத்தி அழித்தது. அதனை கருத்தில் கொண்டு தான், ஃபோர்டோவின் இரண்டு செறிவூட்டல் மண்டபங்களை ஈரான் மலைகளுக்குள் அரை மைல் ஆழத்தில் அமைத்திருக்குமென லண்டனின் த டெலிகிராப் தெரிவித்திருக்கிறது.
என்றாலும் 2015 இல் ஈரான், கூட்டு விரிவாக்கல் நடவடிக்கைத் திட்டத்தின் (ஜே.சி.பி.ஒ.ஏ) கீழ், ஃபோர்டோவில் செறிவூட்டலை நிறுத்தி, அவ்விடத்தை ஒரு ஆராய்ச்சி மையமாக மாற்ற ஒப்புக்கொண்டது.
இருப்பினும், 2018 ல் அமெரிக்கா ஒப்பந்தத்திலிருந்து விலகிய பிறகு, ஈரான் அந்நிலையத்தில் யுரேனியம் செறிவூட்டலை மீண்டும் தொடங்கியது.
இந்நிலையத்தின் மீது 13 ஆம் திகதி முதல் பல தடவைகள் இஸ்ரேல் குண்டுகளை வீசியது. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பதுங்கு குழிகளை தாக்கியழிக்கும் ஜி.பி.யூ-28, பி.எல்.யூ-109 ஆகிய குண்டுகளை எப்-15 போன்ற போர் விமானங்களைப் பயன்படுத்தி இங்கு வீசியுள்ளன. இவை நிலத்திற்குள் மிகவும் ஆழமற்ற இலக்குகளை ஊடுருவி தாக்கக்கூடிய குண்டுகளாகும்.
ஆனாலும் ஃபோர்டோவ் அணுசக்தி நிலையம் போன்ற வலுவூட்டப்பட்ட தளங்களின் அதிக ஆழத்தை அடையும் திறன் கொண்ட குண்டுகள் இஸ்ரேலிடம் இல்லை.
அதனால் ஃபோர்டோவை முடக்கவோ அல்லது குறைந்தபட்சம் அந்த வசதியை பயனற்றதாக மாற்றவோ முடியாது.
இது அதிக வலிமை கொண்ட உருக்கினால் அமைக்கப்பட்டுள்ளது. அதனை அமெரிக்காவின் பல மேம்பட்ட ஆயுதங்களைப் பயன்படுத்தினால் தான் செயலற்றதாக்க முடியும் என்று இஸ்ரேலும் அதன் நேச அணியினரும் கருதுகின்றனர்.
இந்நிலையில் தான் இந்நிலையங்கள் மீது பி. 2 குண்டு வீச்சு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்துமாறு இஸ்ரேல் அமெரிக்காவை பல வாரங்களாகக் கோரி வந்தது.
அற்கேற்ப பி 2 குண்டு வீச்சு விமானங்களைக் கொண்டு மிட்நைட் ஹம்மர் என்ற பெயரில் கடந்த 22ஆம் திகதி ஃபோர்டோ, நடானஸ், இஸ்பகான் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா ஜி.பி.யூ-57 ரக குண்டுகளை வீசியது. அதனை ட்ரம்ப்பே உறுதிப்படுத்தியதோடு தாக்குதலைப் பார்வையிடும் படங்களையும் அவர் வெளியிட்டார். இந்நிலையங்கள் மீளமைக்க முடியாதபடி சேதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
ஆனால் தாக்குதல் நடத்தப்படுவதற்கு இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் 60 சதவீதம் வரை செறிவூட்டப்பட்ட 400 கிலோவுக்கும் மேற்பட்ட யூரேனியத்தைப் பாதுகாப்பாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டதாக ஈரானிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு போர்டோவ் அணுசக்திப் பகுதியில் வழமைக்கு மாறாக 18-20 ட்ராக்குகள் வரிசையில் காணப்பட்ட செய்மதிப் படங்களையும் சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டன.
அதேநேரம் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ இந்த அணுசக்தி நிலையம் இக்குண்டுத்தாக்குதலால் பாதிக்கப்படவில்லை என்றுள்ளது.
ஆறு மீற்றர் நீளம் கொண்ட 30 ஆயிரம் இறாத்தல் (14 ஆயிரம் கிலோ) எடை கொண்ட 14 குண்டுகள் இத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க, இஸ்ரேலிய அதிகாரிகளும் நிபுணர்களும் கூறியுள்ளனர்.
இக்குண்டுகளானது வெடிப்பதற்கு முன் 200 அடி (61 மீற்றர்) வரை நிலத்துக்குள் ஊடுருவிச் சென்று வெடித்து சிதறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதென அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது.
அதனால் இந்த ஜி.பி.யூ-57 குண்டுகள் நிலத்திற்குள் ஊடுருவும் தூரம், ஈராக்கின் அணுசக்தி நிலையம் தாக்கப்பட்டமை உட்பட கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில் தான் போர்டோவ், நடான்ஸ் நிலையங்களை ஈரான் அமைத்திருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையம் 80- – 90 மீற்றர் ஆழத்தில் அமைக்கப்பட்டிருப்பதும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் இந்நிலையத்தை இக்குண்டுகள் தாக்கி இருக்குமா என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
மர்லின் மரிக்கார்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!