சவூதியின் விமான நிலையங்கள், இராணுவ தளம் உள்ளிட்ட பல இடங்களில் ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
30 Oct, 2026
இந்நிலையில் இப்பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் மேற்படி நடன வீடியே தொடர்பில் கவலை தெரிவித்து வாக்குமூலம் அளிக்கும் வீடியோ ஒன்றை பதிவு செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் செயற்பாட்டாளர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை கூறியுள்ளனர். மேற்படி வீடியோ வெளியான பின்னர் தலையை மறைக்கும் வகையில் ஆடையணிந்த பெண்கள் ஒவ்வொருவராக வந்து மன்னிப்பு கோரும் வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. முதல் வீடியோ பதிவு செய்யப்பட்ட இடத்தில் இந்த வீடியோவும் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால், 2 ஆவது வீடியோவையோ அது பதிவுசெய்யப்பட்ட சூழ்நிலையையோ உறுதிப்படுத்த முடியவில்லை என ஏஎவ்பி தெரிவித்துள்ளது. மேற்படி பெண்கள் விடுவிக்கப்பட்டனரா என்பது குறித்தும் உறுதியான தகவல் வெளியாகவில்லை. தெஹ்ரான் நகரில், ஹிஜாப் அணியாததால் கைது செய்யப்பட்ட மாஷா அமீனி எனும் 22 வயதான யுவதி கடந்த செப்டெம்பர் மாதம் பொலிஸ் காவலில் உயிரிழந்ததையடுத்து பாரிய ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகின. ஆர்ப்பாட்டங்களின்போது இடம்பெற்ற மோதல்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.This video of Iranian girls in Tehran’s Ekbatan neighborhood dancing unveiled to the song Calm Down by Rema and Selena Gomez has gone viral. Women are banned from dancing in public in Iran. pic.twitter.com/2hSsY4KFEg
— Iran International English (@IranIntl_En) March 9, 2023
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!