12 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட பாலம் வழியாக சீனா சென்றார் வடகொரிய ஜனாதிபதி
25 Oct, 2026
அவர்களில் முதன்மையானவர் அயத்துல்லா கொமேனி. பிரான்சில் அடைக்கலம் புகுந்திருந்த கொமேனியின் பேச்சுகள் ஒலிநாடாக்கள் மூலம் ஈரானுக்குள் கடத்தப்பட்டு, மக்களிடையே ஒரு பெரும் எழுச்சியை ஏற்படுத்தின. 1979 ஆம் ஆண்டில் 'இஸ்லாமியப் புரட்சி' வெடித்தது. மன்னர் ஷh நாட்டை விட்டு வெளியேறி அமெரிக்காவில் அடைக்கலம் புகுந்தார்.
மன்னர் ஷhவுக்கு அமெரிக்கா புகலிடம் அளித்ததைக் கண்டு ஆத்திரமடைந்த ஈரானியப் புரட்சியாளர்கள், தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டனர்.
அங்கிருந்த 50-க்கும் மேற்பட்ட அமெரிக்க அதிகாரிகளை 444 நாட்கள் பிணைக்கைதிகளாக வைத்திருந்தனர்.
இது அமெரிக்க வரலாற்றில் ஒரு பெரும் அவமானமாகக் கருதப்படுகிறது. அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர், அமெரிக்க பிணைக்கைதிகளை மீட்க எடுத்த இராணுவ முயற்சிகள் தோல்வியில் முடிந்தன. அன்றிலிருந்து இன்று வரை 47 ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே நேரடி உறவு கிடையாது.
யுத்தமும் தியாகமும் : ஈரானியர்களின் மனநிலை
ஈரானியர்களைப் பொறுத்தவரை, நாட்டுக்காகவோ அல்லது மதத்திற்காகவோ உயிர் துறப்பது என்பது பெரும் பெருமையாகக் கருதப்படுகிறது.
1980 ஆம் ஆண்டுகளில் ஈராக் ஜனாதிபதி சதாம் உசேன், ஈரானின் மீது போர் தொடுத்தபோது, அது 8 ஆண்டுகள் நீடித்தது. அந்தப் போரில் பல இலட்சக்கணக்கான ஈரானிய இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
இதன் போது ஈராக்கிற்கு ஆதரவாக அமெரிக்கா நின்றது என்பது ஈரானியர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது. மறுபுறம் ஈரானியத் தலைவர்கள் ஒரு இரும்புக்கரம் கொண்டு உள்நாட்டில் ஆட்சியை நடத்தி வந்தனர்.
கொமேனிக்குப் பிறகு 37 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அயத்துல்லா கமேனி, ஈரானை ஒரு பலமான இராணுவ சக்தியாக மாற்றியுள்ளார். 'அமெரிக்காவிற்கு மரணம்', 'இஸ்ரேலுக்கு மரணம்' என்ற முழக்கங்கள் ஈரானிய அரசியலில் ஒரு அங்கமாகவே மாறிவிட்டன.
இந்த மோதலின் மிக முக்கியமான புள்ளி அணுசக்தியகும். ஒரு நாடு அணு ஆயுத பலம் பெற்றுவிட்டால், அதை உலக நாடுகள் எளிதில் அச்சுறுத்த முடியாது என்பதற்கு வடகொரியா ஒரு சிறந்த உதாரணம்.
கிளிண்டன், புஷ் மற்றும் ஓபாமா என மூன்று அமெரிக்க அதிபர்கள் முயன்றும் வடகொரியா அணு ஆயுத நாடாக மாறுவதைத் தடுக்க முடியாமல் போனது. இன்று வடகொரியாவை யாரும் தொட முடியாது என்ற நிலை உருவாகியுள்ளது.
இதே நிலை ஈரானுக்கும் வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது. மின்சாரம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காக 3.67வீதம் வரை யுரேனியத்தைச் செறிவூட்டலாம். ஆனால், அதை 60 வீதம் அல்லது 90 வீதம் வரை கொண்டு சென்றால் அணு குண்டு தயாரிக்க முடியும்.
2015 ஆம் ஆண்டில் ஒபாமா ஆட்சியில், ஐநா பாதுகாப்பு சபையின் 5 நிரந்தர உறுப்பினர்கள் மற்றும் ஜெர்மனி இணைந்து ஈரானுடன் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தைச் செய்தன.
இதன்படி ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் குறைத்துக்கொள்ளவும், சர்வதேச ஆய்வாளர்களை அனுமதிக்கவும் ஒப்புக்கொண்டது.
2016 ஆம் ஆண்டில் டொனால்ட் டிரம்ப் ஜனாதிபதியானதும், இந்த ஒப்பந்தத்தை 'மிக மோசமான ஒப்பந்தம்' என்று விமர்சித்தார்.
15 ஆண்டுகளுக்குப் பிறகு ஈரான் மீண்டும் அணு ஆயுதங்களைத் தயாரிக்கும் வாய்ப்பு இதில் இருப்பதாகக் கூறி, அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றினார்.
இது ஈரானுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளால் ஈரானின் பொருளாதாரம் சீர்குலைந்தது.
ஜனாதிபதி டிரம்ப் தனது உரைகளில் ஈரானை ஒரு 'தீய சக்தி' என்று தொடர்ந்து விமர்சித்து வருகிறார். சமீபத்திய தாக்குதல்களின் போது, ஈரானியப் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக ஈரானிய அரசை எச்சரித்தார்.
உலகில் ஒன்பது நாடுகள் தற்போது அணு ஆயுதங்களை வைத்துள்ளன. அந்த ஒன்பது நாடுகளும் பத்தாவது ஒரு நாடு அணு ஆயுதத்தைப் பெறுவதை விரும்புவதில்லை. இதைத்தான் ஈரானியர்கள் எதிர்க்கிறார்கள். அணுசக்தியைச் செறிவூட்டுவது தங்களது 'பிறப்புரிமை' என்று ஈரானியர்கள் வாதிடுகிறார்கள்.
தற்போது இலங்கைக்கு அருகே நடந்த தாக்குதல், அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட எவ்வளவு தூரம் செல்லும் என்பதைக் காட்டுகிறது. எச்சரிக்கை ஏதுமின்றி ஈரானியப் போர்க்கப்பலை மூழ்கடித்தது, மத்திய கிழக்கில் இருந்து இந்தியப் பெருங்கடல் வரை போர் மேகங்களைச் சூழச் செய்துள்ளது.
இந்த இக்கட்டான சூழலில், அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவைப் பேணி வரும் ஓமான், சமாதானத்திற்காக ஒரு பாலமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் நடந்த தாக்குதல்களுக்குப் பிறகும், தற்போது நிலவும் பதற்றத்தைத் தணிக்கவும் ஓமான் அதிகாரிகள் இருதரப்புடனும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருப்பினும், ஈரானிய அரசாங்கம் 'அச்சுறுத்தல்களுக்குக் கீழ் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த மாட்டோம்' என்று உறுதியாகக் கூறிவிட்டது.
அதே நேரத்தில், உள்நாட்டில் நடக்கும் மக்கள் எழுச்சிகளையும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கியது . அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், 30,000-க்கும் மேற்பட்டோர் ஈரானில் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார், ஆனால் ஈரான் அதை மறுக்கிறது.
ஈரான் - அமெரிக்கா மோதல் என்பது வெறும் இரு நாடுகளுக்கு இடையிலான எல்லைப் பிரச்சினை அல்ல. இது கொள்கை ரீதியானது, கலாசார ரீதியானது மற்றும் அதிகாரப் போட்டி சார்ந்தது.
அமெரிக்கா உலகப் பொலிஸாகச் செயல்பட நினைப்பதும், ஈரான் அதற்கு அடிபணிய மறுப்பதும் இந்தத் தீராத போருக்குக் காரணமாகின்றன.
இலங்கை போன்ற நாடுகள் இந்த இரண்டு பெரும் சக்திகளுக்கு இடையே சிக்காமல், மனிதநேய அடிப்படையில் கப்பல்களிலிருந்து ஈரானியர்களை காப்பாற்றுவதும், அதே சமயம் சர்வதேச அழுத்தங்களைக் கையாள்வதும் ஒரு மிகப்பெரிய சவாலாகும்.
அணுசக்தி என்ற பூதம் இருக்கும் வரை, இந்த மோதல்கள் ஓயப்போவதில்லை. அது உலக அமைதிக்கு என்றும் அச்சுறுத்தலாகவே அமையும்.
(லியோ நிரோஷ தர்ஷன்)
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!