Belonging: A Journey of Love’ - இத்தாலிப் பெண் இந்தியாவின் மகளான கதை!
22 Nov, 2026
நான்காவது, ஈரானுக்கும் வடகொரியாவுக்குமான உறவு பெரும் ஆபத்தானதாக அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் கருதுகின்றன.
பல சந்தர்ப்பங்களில் ஈரான் வடகொரியாவிடமிருந்து அணுவாயுதங்களை தருவிக்க கூடியதாக உள்ளதென மேற்கு ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
அத்தகைய சூழல் சாத்தியப்படுமாயின் இஸ்ரேல் மட்டுமல்ல அமெரிக்காவே நெருக்கடிக்குள்ளாகும் நிலை தவிர்க்க முடியாததாக அமையும் என்ற கருத்து மேற்கு ஊடகங்களிடமும் உள்ளது.
அதனால் ஈரான் திட்டமிட்டு எல்லைப்படுத்தப்பட்டு தோற்கடிக்கப்படுவதை அமெரிக்கா அதிகம் விரும்புகிறது.
இஸ்ரேல் ஈரானை வேகப்படுத்துமாயின் ஈரான் வடகொரியா மூலம் அணுவாயுதங்களை தருவித்துவிடும் என்ற நிலைப்பாடு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அமெரிக்கா கருதுகிறது.
இதனால் இஸ்ரேல்-, ஈரான் போர் நிதானிக்கப்பட வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு கவனம் உள்ளது.
அதற்காகவே அதிகம் சமாதான தூதுவராகவும் போரைத் தடுக்கும் அரசாகவும் அமெரிக்கா செயற்பட முனைகிறது. அது எதுவும் உண்மையானது அல்ல. போரை சரிவர கையாளுவதும் நீடிப்பதன் மூலமும் ஈரானையும் அதன் நட்பு நாடுகளையும் தோற்கடிக்க முடியுமென அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் கருதுகின்றன.
ஐந்தாவது, எது எவ்வாறு அமைந்தாலும் ஈரான் இஸ்ரேலைத் தாக்கும் போது காட்டும் அதிதீவிரம் அதன் பலத்தைக் காட்டுகிறது.
ரஷ்யா, சீனா என்பன நேரடி ஆதரவை ஈரானுக்கு வழங்காத போதும் மறைமுகமாக தாக்குதலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நாடுகளாகவே உள்ளன.
அதனடிப்படையிலேயே ஈரானின் பலம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானின் இராணுவ பலத்தை எதிர்கொள்ள இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் மேற்காசிய நாடுகள் பல இணைந்து கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.
அப்படியாயின் ஈரானின் இராணுவ பலம் பெரியதாகவே உள்ளதென்பது தெளிவாகத் தெரிகிறது.
300க்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் 100க்கும் மேற்பட்ட ரோன்களும் மட்டும் பயன்படுத்தப்பட்டதல்ல. மாறாக ஈரானின் பலமும் அராபிய தேசங்களின் எண்ணமும் பிரயோகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒட்டுமொத்தமாகவே இஸ்ரேலை அசைக்க முடியாது என்ற நிலையை மாற்றி இஸ்ரேல் மீது பாரிய தாக்குதலை நிகழ்தும் திறனை ஈரான் வெளிப்படுத்தியிருப்பதென்பது ஈரான் வெற்றிகரமாக தாக்குதலை நிகழ்த்திய நாடு என்றே கருத இடமுண்டு.
அது மட்டுமல்ல ரஷ்யா, சீனா, வடகொரியா ஆதரவு மட்டுமல்ல ஈரானிடம் அணுவாயுத பலம் உடையதாகவே கருதப்படுகிறது. அதற்கான வாய்ப்பு அதிகமானதாகவே தெரிகிறது.
ஆறாவது, ஈரானின் தாக்குதலை எதிர்கொள்ள இஸ்ரேலும் தனது அணுவாயுதங்களை பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாகவே போரியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
காரணம் இஸ்ரேலிடம் அணுவாயுதம் உண்டு என்பது மட்டுமல்ல இஸ்ரேல் தனது தனித்துவத்தை பாதுகாக்க வேண்டுமாயின் எந்த எல்லைக்கும் செல்லத் துணியும் ஒரு நாடு என்பதை பலசந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரான் ஒரு தாக்குதலை மேற்கொள்வது அதற்கு ஆபத்தானது என்பதைக் கருதும் போது அடிப்படையில் இஸ்ரேலின் அணுவாயுதபலமே அடிப்படையானதாக அமைந்திருந்தது.
தற்போது அத்தகைய தாக்குதலை ஈரான் மேற்கொண்ட போதும் இஸ்ரேல் பதிலடி கொடுத்த போதும் அதன் விளைவுகளிலிருந்து ஈரான் தன்னை தற்காக்க தயாராகிவிட்டது என்ற வகையில் ஈரான் வலுவான சக்தியாகவே தென்படுகிறது.
ஆனாலும் இஸ்ரேல் இலகுவில் தனது வெற்றியை இழந்துவிடாது. அமெரிக்க- இஸ்ரேலிய கூட்டு பாரிய அழிவை ஈரானுக்கு கொடுக்கத் தயாராகின்றது. அதேநேரம் ஈரானின் பலம் அணுவாயுதத்தில் என்பது முக்கியமானது. அதனை ஈரான் கொண்டுள்ளதாகவே கருதத் தோன்றுகிறது.
அது இஸ்ரேலை மட்டுமல்ல மேற்குலகத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்கும். ஆனால் தற்போதுவரை ஈரான் தன்னிடம் அணுவாயுதம் இருப்பதாக வெளிப்படையாக தெரியப்படுத்தவில்லை. எப்படி இஸ்ரேல் அணுவாயுதத்தை வைத்துக் கொண்டு வெளிப்படையாக அறிவிக்காதுள்ளதோ அவ்வாறே ஈரானும் செயல்படுகிறதோ என்ற சந்தேகம் போரியல் ஆய்வாளர்களிடம் நிலவுகிறது.
எனவே தற்போது ஏற்பட்டுள்ள ஈரானிய- இஸ்ரேல் போர் என்பது அமெரிக்காவினது திட்டமிடலுக்குள் நகர்கிறது.
ஐக்கிய நாடுகள் சபையும் சில நாடுகளும் போரைத் தவிர்க்க முயன்றாலும் அதனை அமெரிக்காவே நிர்ணயிக்கு சக்தியாக மாறியுள்ளது.
ஈரான் முழுமையாக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இஸ்ரேல்- அமெரிக்க கூட்டின் திட்டமிடலாக உள்ளது. தற்போது ஈரானின் அணுத்திறனில் அதிக சந்தேகம் எல்லாத் தரப்பிடமும் ஏற்பட்டுள்ளது. இது போரின் புதிய திருப்பமாக அமைய வாய்ப்புள்ளது.
-பேராசிரியர் கணேசலிங்கம்-யாழ் பல்கலைக்கழகம்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!