தீவிரமாகும் எரிபொருள் நெருக்கடி
19 Oct, 2026
குறித்த இடங்களில் இருந்து தந்திரோபாய அடிப்படையில் தமது படையினர் விலக்கிக் கொள்ளப்பட்டதாக உக்ரேன் தரப்பு அறிவித்துள்ள போதிலும் அதனை நம்புவதற்கு யாரும் தயாராக இல்லை.
இந்தச் சமரில் படைகள் சந்திந்த இழப்பும், படைகள் பின்வாங்கிய போதில் ஆயிரம் வரையான படையினர் போர்க் கைதிகளாகப் பிடிக்கப்பட்டுள்ளதுடன் பெருமளவிலான ஆயுத தளபாடங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக ரஷ்யா விடுத்துள்ள அறிவிப்பும் உக்ரேன் தரப்பின் அறிவிப்பைக் கேள்விக்கு உட்படுத்தியுள்ளன.
போர்க் களத்தில் நீண்ட காலமாகவே ஒருவித மந்தநிலை அவதானிக்கப்பட்டு வருகின்றமை வெளிப்படையான விடயம்.
போரிடும் இரண்டு தரப்புமே களத்தில் பாரிய முன்னேற்றம் எதனையும் அடையும் நிலையில் இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகின்றது.
விரைவான வெற்றி எதனையாவது காண்பித்துவிட வேண்டும் என்னும் முனைப்பு உக்ரேன் தரப்பில் இருந்தாலும் அதனைச் சாதித்துவிட முடியாத நிலையிலேயே உக்ரேன் தரப்பு சிக்கிக் கொண்டுள்ளதைப் பார்க்க முடிகின்றது.
மறுபக்கத்தில் ரஷ்யத் தரப்போ இழப்புக்களை முடிந்தவரை குறைத்துக் கொண்டு மெதுமெதுவாக முன்னேறும் தந்திரத்தைக் கடைப்பிடித்து வருவதை அவதானிக்க முடிகின்றது.
மேற்குலகின் ஆயுத பலத்தையும் பொருண்மிய உதவிகளையும் மாத்திரம் நம்பியிருக்கும் உக்ரேன் பாரிய சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளதாகவே தெரிகின்றது.
உக்ரேனுக்கு அதிகளவில் உதவிகளை வழங்கிவரும் நாடான அமெரிக்காவில் உக்ரேனுக்கு உதவிகள் வழங்குவதில் உருவாகிவரும் எதிர்ப்பு நிலைப்பாடும், பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகளுக்கு அதிக உதவிகளை வழங்க வேண்டிய நிலையில் அமெரிக்கா இருப்பதுவும் நிலமைகளை மேலும் சிக்கலாக்கி வருவதைக் காண முடிகின்றது.
இந்நிலையில் இந்த வருடம் அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் உக்ரேன் போர் தொடர்பில் முக்கிய விடயமாகப் பார்க்கப்படுகின்றது.
நடப்பு அரசுத் தலைவர் ஜோ பைடன் மீண்டும் வெற்றியைப் பெற்றுக் கொள்வாராக இருந்தால் உக்ரேன் தரப்புக்கு அது சாதகமாக அமையுமென எதிர்பார்க்கப்படுகின்றது.
மாறாக குடியரசுக் கட்சி வேட்பாளராகப் போட்டியிடவுள்ள டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெற்றால் உக்ரேன் எதிர்பார்க்கும் உதவிகள் தொடருமா என்ற கேள்வி எழுகின்றது.
அவ்வாறு உதவிகள் தடைப்படுமானால் உக்ரே ன் போர் ஏதாவதொரு வகையில் முடிவுக்கு வந்தே ஆகவேண்டிய தேவை உள்ளது.
தற்போதைய நிலையில் உக்ரேன் போர் மூன்றாவது வருடத்திலும் தொடரும் வாய்ப்புகளே அதிகமாக உள்ளன. இந்நிலையில் களம் யாருக்குச் சாதகமாக அமையப் போகின்றது என்ற கேள்வி எழுகின்றது.
ரஷ்யா மெதுமெதுவாகக் களத்தில் முன்னேறி வரும் நிலையில் உக்ரேன் சமரசத்துக்குத் தயாராகுமா அல்லது தற்போதைய நிலையில் உக்ரேனின் பின்னணியில் செயற்பட்டுவரும் நேட்டோ உக்ரேனுக்கு ஆதரவாக நேரடியாகக் களத்தில் இறங்குமா என்பது அடுத்துவரும் ஓரிரு மாதங்களில் தெரிந்துவிடும்.
உக்ரேன் போர் ஆரம்பமான போதில் அது மூன்றாம் உலகப் போருக்கு வித்திடும் என்ற எதிர்வுகூறல்கள் வெளிவந்தமை ஞாபகம் இருக்கலாம்.
நேட்டோ நாடுகள் உக்ரேனில் நேரடியாகத் தலையீட்டை நிகழ்த்துமாக இருந்தால் அது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்கும் என்பதுவும் அதன் தொடர்ச்சி ஒட்டுமொத்த உலக அழிவுக்குக் காரணமாகும் என்பதையும் விளக்க பூகோள அரசியல் அறிவு எதுவும் அவசியம் இல்லை.
சுவிசிலிருந்து சண் தவராஜா
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!