சூயஸ் கால்வாயின் சரித்திரம் (நிலமெல்லாம் ரத்தம் - 66)
20 Sep, 2026
எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றங்கள் இருக்கின்றன. கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறது. ஆனாலும், இவை மட்டுமே வெற்றிக்குப் போதாது என்று எம்.ஜி.ஆர் கருதினார்.
ஆகவே, சி.பி.எம் தலைவர் பி.ராமமூர்த்தியைச் சந்தித்து ஆதரவு கோரினார் எம்.ஜி.ஆர். இரண்டு காங்கிரஸ் கட்சிகளையும், தி.மு.க-வையும் தோற்கடிக்க வேண்டும் என்பது சி.பி.எம் கட்சியின் நோக்கம்.
எனவே, அ.தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பது என்று சி.பி.எம் முடிவெடுத்தது. போட்டியிலிருந்து விலகினார் என்.சங்கரய்யா.
திண்டுக்கல் தொகுதியில் வேலை செய்ய ஒட்டுமொத்த தி.மு.க-வும் களமிறங்கியது. அத்தனை அமைச்சர்களும் முகாமிட்டார்கள்.
‘தி.மு.க வெற்றிபெற வேண்டும்’ என்று அறிக்கை வெளியிட்டார் பெரியார். பட்டி தொட்டியெங்கும் பிரசாரம் செய்த முதல்வர் கருணாநிதி,
‘உங்கள் ஓட்டு தமிழனுக்கா, அந்நியனுக்கா?’ என்ற கேள்வியை முன்வைத்தார். எம்.ஜி.ஆர் பிறப்பால் மலையாளி. அந்த இன அடையாளத்தைத் தேர்தல் வெற்றிக்கான ஓர் ஆயுதமாகக் கையிலெடுத்தார் கருணாநிதி.
1975-ம் ஆண்டு, ஜூன் 25-ம் தேதி. இந்திய தேசத்தை ‘எமர்ஜென்சி’ என்ற இருள் கவ்வியது. ‘நாடு முழுவதும் நெருக்கடி நிலை அமலுக்கு வருகிறது’ என்று அறிவித்தது இந்திரா காந்தி அரசு.
காவல்துறை நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கைதுசெய்யலாம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொல்லி, ஆண்டுக்கணக்கில் சிறையில் வைக்கலாம். ஜூன் 25 அன்று இரவே கைது வேட்டை தொடங்கியது. நாடு முழுவதும் விடிய விடிய எதிர்க்கட்சித் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டார்கள்.
ஜெயப்பிரகாஷ் நாராயண், மொரார்ஜி தேசாய், அடல் பிகாரி வாஜ்பாய், எல்.கே.அத்வானி, சரண் சிங், ஜார்ஜ் பெர்னாண்டஸ், மது தண்டவதே, அருண் ஜெட்லி, சந்திரசேகர், சரத் யாதவ், கர்பூரி தாக்கூர் உட்பட ஏராளமான அரசியல்வாதிகள் கைதுசெய்யப்பட்டனர்.
குல்தீப் நய்யார் உள்ளிட்ட பத்திரிகையாளர்கள், மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் எனச் சுமார் ஒரு லட்சம் பேர் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள், ‘மிசா’வில் (Maintenance of Internal Security Act) சிறையில் அடைக்கப்பட்டனர் அப்போது, பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் இந்திரா காந்தி என்றாலும், அவருடைய புதல்வர் சஞ்சய் காந்திதான் இந்தியாவின் அதிகார மையமாக இருந்தார்.
மத்திய அமைச்சர்களும், அதிகாரிகளும், மாநில முதல்வர்களும் சஞ்சய் காந்தியின் ஆணைக்கிணங்க செயல்பட்டனர்.
சஞ்சய் காந்தி அறிமுகப்படுத்திய முக்கியத் திட்டங்களில் ஒன்று ‘குடும்பக் கட்டுப்பாடு திட்டம்’.
டாக்ஸி ஓட்டுநர்கள், கூலித் தொழிலாளர்கள் என ஏழைகள்தான் இந்தத் திட்டத்தின் இலக்கு. அவர்களை வலுக்கட்டாயமாகப் பிடித்துச் சென்று ‘வாசெக்டமி’ எனும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்தார்கள்.
கிராமங்களில் போலீஸார் சுற்றிவளைத்து, அங்கிருக்கும் ஆண்களைப் பிடித்துச் சென்று குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டார்கள்.
சுகாதாரமற்ற முறையில் குடும்பக் கட்டுப்பாடு செய்ததால், பலர் மரணமடைந்தனர்.
‘நகரை அழகுபடுத்துதல்’ என்பது சஞ்சய் காந்தியின் இன்னொரு திட்டம். டெல்லியில் ‘துர்க்மேன் கேட்’ என்ற குடிசைப் பகுதியில், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்துவந்தன.
அவர்களில் பெரும்பாலானோர் ஏழை முஸ்லிம்கள். திடீரென்று புல்டோசர்களைக் கொண்டு சென்று அங்கிருந்த வீடுகளை அதிகாரிகள் இடித்தனர்.
அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களைத் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார்கள். அதில், பலர் உயிரிழந்தனர்.
பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டிருந்தது. அரசின் அனுமதியில்லாமல் எந்தச் செய்தியையும் வெளியிட முடியாது.
அதனால், ‘துர்க்மேன் கேட்’ கொடுமைகள் போன்ற பல செய்திகள், எமர்ஜென்சி முடிவுக்கு வந்த பிறகுதான் வெளியுலகுக்கே தெரியவந்தன.
மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘மிசா’ சட்டத்தில் கைது
`உங்கள் மகன் ஸ்டாலினை..!
1976, ஜனவரி 31-ம் தேதி. தமிழகத்தில் தி.மு.க ஆட்சி நடந்துவந்தது. தனியார் பள்ளி விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் கருணாநிதி, ‘அநேகமாக, முதல்வர் என்ற முறையில் நான் கலந்துகொள்ளும் கடைசி நிகழ்ச்சி இதுவாகத்தான் இருக்கும்’ என்று பேசுகிறார்.
நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்குத் திரும்புகிறார். `தி.மு.க அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது’ என்ற தகவல் வருகிறது. நண்பர்களிடம் பேசுவதற்காகத் தொலைபேசியை எடுக்கிறார்.
சேவை துண்டிக்கப்பட்டிருக்கிறது. முதல்வரின் பாதுகாப்புக்காக இருந்த காவலர்கள் வாபஸ் பெறப்படுகிறார்கள்.
இரவு 8 மணிக்குக் காவல்துறையினர் வருகிறார்கள். ‘என்னைக் கைதுசெய்ய வேண்டுமா?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்களை அல்ல...’ என்று பதில் வருகிறது. ‘பிறகு, யாரைக் கைதுசெய்ய வந்திருக்கிறீர்கள்?’ என்று கருணாநிதி கேட்கிறார். ‘உங்கள் மகன் ஸ்டாலினை...’ என்கிறார் காவல்துறை அதிகாரி!
(இன்னும் அறிவோம்
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!