``என் பொண்ணு பேசிவெச்சிருக்க ஆடியோவை கேட்டப்போ...’’nபுதுமணப்பெண் பவித்ராவின் nதற்கொலை ஆணவக்கொலையா?
24 Nov, 2026
அசாமின் ஜோர்ஹாட்டைச் சேர்ந்த சுமிதா, தனது கணவரிடமிருந்து பிரிந்து, பிப்ரவரி 11 முதல் கொல்கத்தாவில் உள்ள ஃபால்குனி மற்றும் ஆர்த்தி கோஷ் இருவருடனும் வசித்து வருவதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஃபால்குனி தனது கணவரைப் பிரிந்து தாயுடன் வாழ்கிறார்.நேற்று மாலை ஃபால்குனி, சுமிதா இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
ஃபால்குனி சுமிதாவை சுவரில் தள்ளியதில் மயக்கமடைந்தார். அவர் சுயநினைவு திரும்பியதும், மீண்டும் சண்டை ஏற்பட்டது.
இதன் போது, ஃபால்குனி சுமிதாவின் முகம் மற்றும் கழுத்தில் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ளார்.
பின்னர் உடலை வெட்டி சூட்கேசில் வைத்து தாயும் மக்களும் பராசத் காஜிபாராவிலிருந்து சீல்டாவுக்கு சூட்கேஸுடன் ரெயிலில் பயணம் செய்து அங்கிருந்து ஒரு டாக்ஸி பிடித்து உடலை குமார்துலி காட் கங்கை நீரில் அப்புறப்படுத்த முயன்றுள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.",
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!