உலகில் அதிகம் தேயிலை உற்பத்தி செய்யும் டாப் 10 நாடுகள் இதுதான்
05 Nov, 2026
தென் ஆப்ரிக்காவிலும் வைரஸ் பரவி வருகிறது. அந்நாட்டில் 5 ஆயிரத்து 951 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு அங்கு 116 பேர் பலியாகியுள்ளனர். வைரசின் தாக்கம் தீவிரமடைந்து வருவதால் தென் ஆப்ரிக்காவில் மார்ச் 27-ம் தேதி முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பலர் வருமானம் இழந்து ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டில் சென்சூரியன் பகுதியில் ஊரடங்கு காரணமாக உணவின்றி தவித்துவந்த மக்களுக்கு அரசு தரப்பிலும், சில தனியார் அமைப்புகளும் சேர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர். இந்த தகவலை அடுத்து உணவு பொட்டலங்களை வாங்க அப்பகுதியில் ஏராளமான மக்கள் குவிந்தனர். மக்கள் கூட்டம் அலை போதியதால் அவர்கள் அனைவரும் வரிசையில் நிற்கவைக்கப்பட்டனர். 4 கிலோ மீட்டர்களுக்கு (2.5 மைல்) நீண்ட அந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறினர். இந்த நிகழ்வு வானில் இருந்து டூரோன் கேமரா மூலம் படமாக்கப்பட்டுள்ளது. மக்கள் உணவுக்காக நீண்ட வரிசையில் காத்துக்கிடந்த அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.People queue for more than two miles to collect food parcels in South Africa pic.twitter.com/PwS6mDqz9o
— The Independent (@Independent) May 1, 2020
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!