news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உயர்தர வகுப்பு மாணவன் கடலில் மூழ்கி பலி

08 Jan, 2023
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கடலில் மூழ்கி உயிரிழந்த, ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலையில் உயர்தர கலைப்பிரிவில் கற்கும் மாணவனான மனாப்தீன் அப்துர் றஹ்மான் (வயது 19) என்பவரின் சடலம், சனிக்கிழமை (06) மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். எதிர்வரும் 23ஆம் திகதி பரீட்சைக்குத் தோற்றவுள்ள இம்மாணவனும் அவரது குடும்பத்தினரும் சனிக்கிழமை (07) சவுக்கடி கடற்கரைக்குச் சென்று, தனது சகோதரருடன் கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது, பாரிய அலையொன்றால் இருவரும் அள்ளுண்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளனர். சற்று நேரத்தில் கடற்கரையை நோக்கி வந்த பாரிய அலையின் மூலம், கடலில் மூழ்கிய இருவரும் கரையொதுங்கினர். அவ்வேளையில், அப்துர் றஹ்மான் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளார். இவரது சகோதரரான உபைதீன் றஹ்மான் (வயது 17) உயிருக்குப் போராடிய நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். மரணமடைந்த மாணவனின் தந்தை மூன்றரை வருடங்களின் பின்னர் வெள்ளிக்கிழமை (06) மாலைதான் கட்டாரிலிருந்து வீடு திரும்பியிருந்த நிலையில், சனிக்கிழமை காலை குடும்ப சகிதம் சவுக்கடி கடற்கரைக்கு சென்ற போதுதான் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மரணமடைந்த மனாப்தீன் அப்துர் ரஹ்மானின் மரண விசாரணைகளை, மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம் நஸீர் முன்னெடுத்தார்.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!