news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலகப் பெரும் செல்வந்தர் விளடிமீர் புட்டீன் சொத்துச் சேர்ந்த இரகசியம்

21 Feb, 2015

உலகின் முன்னணிச் செல்வந்தர்களுக்குள் இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனும் ஒருவர் எனப் பலர் கருதி இருந்தனர். அவர் முன்னணிச் செல்வந்தர் அல்லர். அவர் முதல்தரச் செல்வந்தர் என அவரது முன்னாள் நெருங்கிய நண்பர் Bill Browder அம்பலப்படுத்தியுள்ளார்.

Forbeசஞ்சிகையின் கணிப்பின் படி உலகின் முன்னணி செல்வந்தர்களின் பட்டியல்:

1. Bill Gates Net Worth: $76 Billions Source of wealth: Microsoft

2. Carlos Slim Helu & family Net Worth: $72 Billions Source of wealth: telecom

3. Amancio Ortega Net Worth: $64 Billions Source of wealth: retail

4. Warren Buffett Net Worth: $58.2 Billions Source of wealth: Berkshire Hathaway

5. Larry Ellison Net Worth: $48 Billions Source of wealth: Oracle

6. Charles Koch Net Worth: $40 Billions Source of wealth: diversified

7. David Koch Net Worth: $40 Billions Source of wealth: diversified

8. Sheldon Adelson Net Worth: $38 Billions Source of wealth: casinos

9. Christy Walton & family Net Worth: $36.7 Billions Source of wealth: Wal-Mart

10. Jim Walton Net Worth: $34.7 Billions Source of wealth: Wal-Mart

இதே வேளை இரசிய அதிபர் விளடிமீர் புட்டீனின் சொத்து 70பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் புட்டீனின் உண்மையான சொத்து 200 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என அவரது முன்னள் நண்பரும் இரசியாவில் தனது   Hermitage Capital Management என்னும் நிறுவனத்தின் மூலம் பெரும் முதலீடுகளைச் செய்தவருமான பில் பௌடர் Bill Browder அம்பலப் படுத்தியுள்ளார்.

உலகின் முதல் தரச் செல்வந்தராகக் கருதப்படும் மைக்குறோசொஃப்ர்ரின் அதிபர் பில் கேட்ஸிலும் பார்க்க புட்டீன் இரு மடங்கு செல்வந்தராகும். இரசிய ஊகம் ஒன்று புட்டீன் திருடிய சொத்து 257 பில்லியன் அமெரிக்க டொலர்கள் எனச் செய்தி வெளியிட்டுள்ளது.

பில் பௌடர் RED NOTICE என்னும் தலைப்பில் ஒரு புத்தகத்தையும் எழுதியுள்ளார். அதில் அவர் இரசிய அதிகார மையங்களைப் பற்றியும் அவற்றின் ஊழல்களையும் அமபலப்படுத்தியுள்ளார். இரசியாவில் மற்றவர்களைக் கைது செய்யக் கூடியவரே அதிகார முள்ளவர். பில் பவுடரின் சட்டவாளரான Sergei Magnitsky இரசியாவில் கொல்லப்பட்டதையும் பவுடர் அம்பலப்படுத்தியுள்ளார். இரசியாவின் பல ஊழல்களை Sergei Magnitsky அம்பலப் படுத்தினார்.

2007-ம் ஆண்டு பிரித்தானிய கார்டியன் பத்திரிகை புட்டீன் கடல் கடந்த வெளிப்படைத் தன்மையற்ற நிதியங்களின் வலையமைப்பின்  (non-transparent network of offshore trusts) மூலம் பெரும் சொத்தை வைத்திருக்கின்றார் எனச் செய்தி வெளியிட்டது.

இவை பல எரிபொருள் நிறுவனங்களில் பங்குடமைகளைக் கொண்டுள்ளன.  கருங்கடலை ஒட்டிய கடற்கரையில் புட்டீனிற்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஒரு மாளிகை உண்டு. ஸ்பெயினில் Costa del Sol என்னும் இடத்திலும்  புட்டீனிற்கு ஒரு மாளிகை இருப்பதாக இலண்டனில் இருந்து வெளிவரும்  டெய்லி மெயில் பத்திரிகை அம்பலப்படுத்தியது.

பில் பௌடர் இரசியாவில் ஊழல் செய்த ஒரு பணமுதலையை புட்டீன் கைது செய்தார். அதைத் தொடர்ந்து ஊழல் மூலம் பெரும் பணம் சேர்த்த பல செல்வந்தர்கள் புட்டீனிடம் சென்று தங்களையும் கைது செய்ய வேண்டாம் என வேண்டினர்.

அவர்கள் ஊழலால் திரட்டியதில் 50 விழுக்காடு பெற்றுக் கொண்டு அவர்களை புட்டீன் கைது செய்யாமல் விட்டு விட்டார். இதுதான் புட்டீன் பெரும் சொத்துச் சேர்த்ததின் இரகசியம் என்கின்றார் பில் பௌடர்.

Karen Dawisha என்பவர் எழுதிய Putin’s Kleptocracy: Who Owns Russia? என்ற புத்தகத்தில் புட்டீனின் சொத்துச் சேர்ப்பு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே ஆரம்பித்து விட்டது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சோவியத்தின் வீழ்ச்சிக்கு முன்னரே சோவியத் பொதுவுடமைக் கட்சி பெரும் தொகைப்பணத்தை வெளிநாடுகளிலும் இரசியாவிலும் இரகசியமாக வைப்பிட்டு வைத்தது என்கின்றார் Karen Dawisha. சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் இரசியா தனி நாடாக இயங்கத் தொடங்கிய பின்னர் சென்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

அதை நீக்க புட்டீன் வெளிநாடுகளுக்கு சென்ற் பீட்டர்ஸ்பேர்க் நகரத்தில்   இருந்து மூலப் பொருட்களை ஏற்றுமதி செய்து பதிலாக உணவுப்பொருட்களை இறக்குமதி செய்ய ஏற்பாடு செய்தார். ஆனால் எந்த உணவுப் பொருட்களும் வந்து சேரவில்லை. அந்த ஊழலில் நூறு பில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற்றுக் கொண்டார் எனப்படுகின்றது.

இரசியாவில் கடந்த 14 ஆண்டுகளாக விளடிமீர் புட்டீன் பதவில் இருக்கின்றார்.  கடைசியாக இரசிய அதிபர் தேர்தல் 2012-ம் ஆண்டு நடந்தது அதனால் அவர் இன்னும் இரண்டு ஆண்டுகள் பதவியில் இருக்க முடியும். 1999இல் இருந்து 2000ம் ஆண்டு வரையும் பின்னர் 2008இல் இருந்து 2012 வரையிலும் இரசியாவின் தலைமை அமைச்சராகவும் புட்டீன் இருந்தார்.

2016-ம் ஆண்டின் முன்னர் புட்டீனை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு அவரைப்பற்றி இன்னும் பல இரகசியங்கள் வெளிவரும்,

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!