பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்...
28 Oct, 2026
ஸ்பெயினில் பலி எண்ணிக்கை 18 ஆயிரத்து 800 ஆக உயர்ந்தது. நேற்று 557 பேர் உயிரிந்தனர்.
1 லட்சத்து 80 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் நேற்று ஒரே நாளில் 578 பேர் உயிரிழந்தனர். அங்கு இதுவரை 21 ஆயிரத்து 645 பேர் பலியாகி இருக்கிறார்கள். 1 லட்சத்து 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலியில் நேற்று புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்துக்குள் சென்றது. அங்கு கொரோனா வைரசின் பாதிப்பு குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
பிரான்சில் கொரோனா வைரசின் தாக்கம் உச்சத்தை அடைந்து இருக்கிறது. அங்கு நேற்று 1,438 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது. அதேபோல் புதிதாக 4,500 பேர் வைரசுக்கு பாதிக்கப்பட்டனர். மொத்தம் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
இங்கிலாந்தை புரட்டி போட்டு வரும் கொரோனா வைரசுக்கு அங்கு நேற்று 761 பேர் உயிரிழந்தனர். இதுவரை 12 ஆயிரத்த 800 பேர் பலியாகியும், 98 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர்.
ஜெர்மனியில் 3,800 பேர் பலியாகியும், 1 லட்சத்து 34 பேர் பாதிக்கப்பட்டும் உள்ளனர். சீனாவில் நேற்று கொரோனா வைரசுக்கு ஒருவர் மட்டுமே உயிரிழந்தனர். இதுவரை 3 ஆயிரத்து 342 பேர் பலியாகி இருக்கிறார்கள். 82 ஆயிரத்து 295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று புதிதாக 46 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஈரானில் 4,797 பேரும், பெல்ஜியத்தில் 4,440 பேரும், நெதர்லாந்தில் 3,134 பேரும், சுவிட்சர்லாந்தில் 1,239 பேரும், பிரேசிலில் 1,757 பேரும், கனடாவில் 1,010 பேரும், சுவீடனில் 1,203 பேரும் பலியாகி உள்ளனர். உலகம் முழுவதும் 210 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு இதுவரை 5 லட்சத்து 10 ஆயிரம் பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். 14 லட்சம் பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார் கள். இதில் 51 ஆயிரம் பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தென்அமெரிக்கா நாடான கொலம்பியாவில் கொரோனா தாக்கம் உள்ளது. இதையடுத்து அங்கு சிறையில் உள்ள 4 ஆயிரம் கைதிகளை வீட்டு காவலில் வைக்க அரசு முடிவு செய்து இருக்கிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!