உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது.
வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 4.67 கோடி பேருக்கும் அதிகமாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 3.36 கோடிக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
வைரஸ் பரவியவர்களில் 11.88 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!