உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!
உலக அளவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், மொத்தமாக 13இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 13இலட்சத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இதுதவிர கொவிட்-19 தொற்றினால் ஐந்து கோடியே 31இலட்சத்து 97ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து மூன்று கோடியே 72இலட்சத்து 80ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பு மற்றும் உயிரிழப்பினை எதிர்கொண்ட நாடாக அமெரிக்கா விளங்குகின்றது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!