news@ilakkiyainfo.com

பிரிவுகள்

உலக வங்கி இலங்கைக்கு அவசர கடன் உதவியாக ரூ. 76 கோடி வழங்க அனுமதி

12 Apr, 2022
இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்காக, இலங்கை உலக வங்கியிடம் அவசர கடனுதவியை நாடியுள்ளது. இந்நிலையில், இலங்கைக்கு தேவையான அத்தியாவசிய மருந்து பொருட்களை கொள்முதல் செய்வதற்கு உடனடி உதவியாக 76 கோடி ரூபாய் வழங்க உலக வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். உலக வங்கியின் இலங்கை பிரதிநிதிகளுடன் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உலக வங்கி இதை கூறியுள்ளது. உலக வங்கியினால், மேலும் 3800 கோடி ரூபாய் உதவித் தொகை கிடைக்கவுள்ளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி கூறுகின்றார். விவசாயிகளுக்கு மானியம் வழங்குதல், விவசாயத்தை ஊக்குவித்தல் மற்றும் அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்வதற்காக இந்த உதவித் தொகை கிடைக்கப் பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!