கெசல்கமு ஆற்றில் விழுந்து 10 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!
02 Nov, 2026
கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் உழவு இயந்திரம் உழுது கொண்டிருந்த போது உருண்டு கிணற்றுக்குள் விழுந்துள்ளது. இதன் போது சாரதி சாதுரியமாக மயிரழையில் உயிர் தப்பியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது
திங்கள் கிழமை காலை ஒன்பது மணியளவில் மலையாளபுரம் வடக்கில் காணியொன்றை உழுதுகொண்டிருந்த போது பின்புறமாக உழவு இயந்திரம் உருண்டு 30 அடி கிணற்றுக்குள் விழ்ந்துள்ளது. முப்பது அடி கிணற்றில் 25 அடி வரை நீர் காணப்பட்டதன் காரணமாக சாரதியும் உழவு இயந்திர உரிமையாளருமான செல்லத்துரை விஜயகாந்தன் என்பவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். ஜந்துக்கு மேற்பட்ட நீர் இறைக்கும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு பல மணித்தியாலயங்கள் நீர் இறைக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி அறிவியல்நகர் பொறியில் பீடத்திலிருந்து பாரம் தூக்கி கொண்டு வரப்பட்டு உழவு இயந்திரம் மீட்க்கப்பட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!