news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஊரடங்கு தளர்த்தப்படும் நேரம், மாகாணங்களுக்கிடையேயான போக்குவரத்து குறித்து விசேட அறிவிப்பு

23 May, 2020
எதிர்வரும் மே மாதம் 26 செவ்வாய்க்கிழமை முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை மட்டுமே அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் மே 26 செவ்வாய் முதல் கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்திற்கும் அனுமதியளிக்கப்படும். நாளை, 24 ஞாயிறு மற்றும் 25 திங்கள் ஆகிய இரு தினங்களும் நாடு முழுவதிலும் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!