இதயத்தில் அடைப்பு ஏற்பட்டாலே கட்டாயம் ஆஞ்சியோபிளாஸ்டி வேண்டுமா? மருத்துவர்கள் விளக்கம்
16 Oct, 2026
நாடு முழுவதும் அமலில் உள்ள 21 நாட்கள் ஊரடங்கு வரும் செவ்வாய்க்கிழமையுடன் முடிவுக்கு வருகிறது. இந்த ஊரடங்கை நீட்டிக்கலாமா? ஊரடங்ககை தளர்த்தலாமா? என்ற விவகாரத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இன்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட உள்ளது.
இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகள் அமல்படுத்தியுள்ள ஊரடங்கை விரைவாக தளர்த்துவதால் வைரஸ் அதிபயங்கர மறு எழுச்சிக்கு வழிவகுக்கும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் பேசியதாவது:-
''ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ள சில நாடுகள் ஏற்கனவே மக்கள் வீடுகளிலேயே இருக்கவேண்டும் என விதித்துள்ள கட்டுபாடுகளை தளர்த்த திட்டமிட்டுள்ளது. அனைவரையும் போல உலக சுகாதார அமைப்பும் நாடுகள் விதித்துள்ள சில கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும் என விரும்புகிறது.
அதே நேரம் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மிகவும் விரைவாக தளர்த்துவது வைரசின் பயங்கர மறு தாக்குதலுக்கு வழி வகுக்கும். இந்த நிலைமையை திறம்பட நிர்வகிக்கத்தவறினால் மாறுபாடான எதிர்மறை விழைவுகளை சந்திக்க நேரிடும்’’ என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!