அமெரிக்காவை மிரளவிடும் ஏவுகணைப் படை.. ஈரானின் புதிய "Missile city".. அப்படி என்ன special?
23 Nov, 2026
கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிறுவனத்தின் வருடாந்திர விழாவில், சுமார் 800 மேசைகளில் கட்டுக்கட்டாகப் பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. விழாவில் கலந்துகொண்ட சுமார் 7,000 ஊழியர்களுக்கு, ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதாவது சுமார் 15 நிமிடங்களுக்குள் அவர்களால் எவ்வளவு பணத்தை எண்ண முடியுமோ, அவ்வளவு பணத்தையும் அவர்களே எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. 2025-ஆம் ஆண்டில் அந்த நிறுவனம் ஈட்டிய லாபத்தில், ஏறக்குறைய 70% தொகையை ஊழியர்களுக்கே போனஸாகப் பிரித்துக் கொடுத்துள்ளது. நிறுவனத்தின் தலைவர் குய் பெய்ஜுன் (Cui Peijun), தனது ஊழியர்கள் கார் கடன் மற்றும் வீட்டுக்கடன் போன்ற நிதிச் சுமைகளால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கு நேரடியாகப் பண உதவி செய்ய விரும்பி இந்த முடிவை எடுத்ததாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான விடீயோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இது அனைவரின் புருவத்தையும் உயர்த்த வைத்துள்ளதோடு பலரையும் பொறாமைப்படவும் வைத்துள்ளது. ! இது முதல்முறை அல்ல.. இந்த நிறுவனம் இப்படி வித்தியாசமாக போனஸ் வழங்குவது இது முதல் முறையல்ல. கடந்த 2024 ஆம் ஆண்டில் 260 மில்லியன் யுவான் லாபம் ஈட்டியதால் அதில் 170 மில்லியன் யுவானை போனஸாக வழங்கியது. சர்வதேச மகளிர் தினத்தன்று 2,000 பெண் ஊழியர்களுக்கு சுமார் 1.6 மில்லியன் யுவான் போனஸ் வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஊழியர்களுக்கு ரூ.270 கோடி போனஸ் வழங்கிய சீன நிறுவனம் குழந்தை பிறப்பு விகிதத்தைக்View this post on Instagram
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!