அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட 7 இலங்கை இளைஞர்கள்.
28 May, 2026
ரஷ்யா, உக்ரைனின் மரியுபோல் நகரத்தின் முழுக் கட்டுப்பாட்டையும் தனதாக்கிக்கொள்ளும் முயற்சியில் நீண்டகாலமாக ஈடுபட்டுவருகிறது.
அதனால் ரஷ்யா, உக்ரைன் போரின்போது மரியுபோல் நகரைக் கிட்டத்தட்ட தரைமட்டமாக்கிவிட்டது.
இந்த நிலையில், மரியுபோல் நகரில் ரஷ்யப் படைகளிடமிருந்து இத்தனை நாள்கள் தாக்குப்பிடித்த உக்ரைன் ராணுவத்தின் 36-வது கடற்படை மரைன் பிரிகேட் தனது முகநூல் பக்கத்தில், ``இது எங்கள் போராட்டத்தின் கடைசிநாள். கிட்டத்தட்ட எல்லா ஆயுதங்களும் தீர்ந்துவிட்டன.
வெடிபொருள்களும் போரைச் சமாளிக்கும் அளவுக்கு இல்லை. இதற்குப் பிறகு எங்களில் சிலருக்கு மரணமும், சிலருக்குச் சிறையும் காத்திருக்கின்றன.
நெருப்பு வளையத்தால் சுற்றிவளைக்கப்பட்டிருக்கிறோம். இதனால், மரியுபோல் முழுமையாக ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்குள் செல்வது உறுதி" எனப் பதிவிட்டுள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!