சட்டத்தின் முன் சரணடையும் அரசியல் அதிகார துஷ்பிரயோகம்;கம்பி எண்ணப்போகும் ராஜபக்ஸ குடும்பத்தினர்
18 Sep, 2026
இதன் மூலம் உக்ரைன் கருங்கடலிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு, வெறும் நிலப்பரப்பை கொண்ட நாடாக மட்டுமே நீடிக்கும்.
'டினிப்ரோ' உக்ரைனின் பொருளாதாரத்தின் மையமாக உள்ளது. போக்குவரத்து, விவசாயம் மற்றும் எரிசக்தி உற்பத்தி உள்ளிட்டவை இங்குதான் மேற்கொள்ளப்படுகிறது.
உக்ரைன் ஜனாதிபதி அலுவலக அதிகாரியான 'கர்னல் பாவ்லோ பாலிசா' இது குறித்த கூறுகையில், "இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1ம் தேதிக்குள், டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் என்கிற உக்ரைனிய மாநிலங்களை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவர ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள், வடக்கு உக்ரைன் பகுதி வரை ஆக்கிரமிப்பு செய்து, அங்கு தனது எல்லையை நிறுவ ரஷ்யா முயல்கிறது" என்று தெரிவித்திருந்தார்.
இதே கருத்தை உக்ரைன் ராணுவமும் உறுதி செய்திருக்கிறது. 2026க்குள், உக்ரைனின் பாதி பகுதியை ரஷ்யா கைப்பற திட்டமிட்டிருக்கிறது என்று உக்ரைன் ராணுவம் கூறியுள்ளது.
குறிப்பாக ஒடெசா மற்றும் மைக்கோலைவ் ஆகிய பகுதிகளை கைப்பற்றிவிட்டால், உக்ரைனை கடலிலிருந்து துண்டித்துவிடலாம்.
கடல் போக்குவரத்துக்கு இனி ரஷ்யாவை மட்டுமே அணுகும் வகையில் உக்ரைனை சுருக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.
உக்ரைனின் மொத்த பரப்பளவு தோராயமாக 603,500 சதுர கிலோமீட்டர்கள். இதில் 336,300 சதுர கிலோமீட்டர்களை கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது என்று சொல்லப்படுகிறது.
Dnipro river
முதலில் ராணுவ ரீதியிலான தாக்குதலும், பின்னர் பொருளாதார ரீதியான தாக்குதலுக்கும் ரஷ்யா திட்டமிட்டிருக்கிறது. எனவே இந்த திட்டத்திலிருந்து உக்ரைனால் தப்பிக்கவே முடியாது என்றும் சொல்லப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!