தேர்தலுக்கு முதல் நாள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா! - தீவிர மோதலுக்கு அறிகுறியா?
03 Nov, 2026
அமெரிக்கா இந்த போரில் இத்தனை காலம் குளிர் காய்ந்து கொண்டு இருந்தது. மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதையும், அவர்களின் எண்ணெய் வளங்களை திருடுவதையும் அமெரிக்கா குறிக்கோளாக கொண்டு செயல்பட்டுக் கொண்டு இருந்தது.
அமெரிக்கா குளிர் காய்ந்து கொண்டு இருந்த தீயில் சீனா தண்ணீரை ஊற்றி கடந்த மார்ச் மாதம் அணைத்தது.
பல ஆண்டுகளாக மோதலில் இருந்த ஈரான் - சவுதி அரேபியா தற்போது இரண்டு நாட்டு உறவை புதுப்பிக்க முடிவு செய்தது.
இரண்டு நாடுகளும் முதல்முறையாக மற்ற நாட்டில் தூதரகம் அமைக்க ஏற்றுக்கொண்டன. அதேபோல் தொலைபேசி உறவை மேற்கொள்ளவும் ஏற்றுக்கொண்டன.
சீனாவின் சமாதான பேச்சே இதற்கு காரணம்.
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்: இந்த நிலையில்தான் தற்போது இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் தொடங்கி உள்ளது.
பல இஸ்லாமிய நாடுகளை இது ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. சவுதி - இஸ்ரேல் இடையே பொருளாதார ஒப்பந்தம் நடக்கப்பட இருந்தது.
இதை மத்திய கிழக்கு நாடுகள் எகிப்து, ஈரான் போன்றவை விரும்பவில்லை.
இந்த ஒப்பந்தத்திற்கு இடையே தற்போது இஸ்லாமியர்களின் பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கி வருகிறது.
சவுதி அரேபியா இந்த விவகாரத்தில் தற்போது இஸ்ரேலை ஆதரிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.
இந்த மோதல் காரணமாக பாலஸ்தீனத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. அதன்படியே இஸ்ரேலை ஆதரிக்காமல் பாலஸ்தீனத்தை ஆதரிப்பதாக சவுதி அரேபியா அறிவித்து உள்ளது.
இந்த நிலையில்தான் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் சவுதி முடி இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் நேற்று இரவு பாலஸ்தீன-இஸ்ரேல் மோதல் குறித்து விவாதித்தனர்.
இரு தலைவர்களுக்கிடையிலான இந்த முதல் தொலைபேசி உரையாடல் உலக அளவில் கவனம் பெற்றுள்ளது.
சுமார் 45 நிமிடங்கள் இவர்கள் ஆலோசனை செய்தது இஸ்ரேல், அமெரிக்கா போன்ற மேற்கு உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.
போரை நிறுத்துவது எப்படி, மக்கள் பிரச்னையை சரி செய்வது எப்படி என்று இவர்கள் இருவரும் ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!