news@ilakkiyainfo.com

பிரிவுகள்

'எதுக்கு இந்த வீரப்பன் மீசை?' பதிலே சொல்லாமல் மழுப்பிய விக்ரம்!- (வீடியோ இணைப்பு)

14 Aug, 2015
இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை அந்நியன், கந்தசாமி, ஐ என ஏதாவதொரு வனவாசத்தில் சிக்கிக் கொள்வது விக்ரம் வழக்கம். இனியும் அப்படி சிக்கிக் கொள்ளமாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே கிடைக்கிற கேப்பில் குறுகிய காலத்தில் படங்களை நடித்துக் கொடுக்கும் முடிவில் இருக்கிறார்.
13-1439454950-vikram456
அப்படி குறுகிய காலத்துக்குள் அவர் நடித்துக் கொடுத்ததுதான் பத்து எண்றதுக்குள்ள. இந்தப் படத்தில் விக்ரம் டாக்சி டிரைவராக நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா' படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
13-1439454944-vikram-samantha34
இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடந்தது. இதில் விக்ரம், சமந்தா, இயக்குனர் விஜய் மில்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு விக்ரம், வீரப்பன் மீசையுடன் வந்திருந்தார். இந்த மீசை எந்தப் படத்துக்கான கெட்டப் என்று கேட்டதற்கு மர்மமாக சிரித்து வைத்தார் விக்ரம். நிச்சயம் இது பத்து எண்றதுக்குள்ள படத்துக்கான கெட்டப் இல்லை
13-1439454936-vikram4561
அடுத்து அரிமா நம்பி இயக்குநர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் அவர் நடிக்கிறார். அந்தப் படத்துக்காகத்தான் இந்த கெட்டப் என்கிறார்கள். ஒரு சின்ன கிக் வேண்டும் என்பதற்காக அதைச் சொல்லாமல் ரகசியம் காக்கிறாராம்!

ஏர்வாய்ஸுக்கு ஆசைப்பட்ட அசினுக்குக் கடைசியில் கிடைத்தது மைக்ரோமேக்ஸ்தான்!

 

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!