மதுபோதையில் வாகனம் செலுத்தி விபத்தை ஏற்படுத்திய சாரதி கைது
25 Oct, 2026
ஏனென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் அன்டன் பாலசிங்கம் மட்டுமே பேச்சுவார்த்தை மேசைக்கு பொருத்தமானவராக இருந்தார்.
அவரால் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் நிலைப்பாடுகளை மாற்றக்கூடிய முழுமையான இயலுமை காணப்பட்டிருக்கவில்லை.
அவ்வாறானதொரு தரப்புடன் பேச்சுவார்த்தை மேசையில் அமர்ந்திருந்து பேசுவது என்பது மிகவும் கடினமானதொரு விடயம். அந்தப்பணியை பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் செய்திருந்திருக்கின்றமை பாராட்டக்கூடிய விடயமாகும்.
ஆனால் அவர் பேச்சுவார்த்தை மேசையில் எந்த நம்பிக்கையுடன் இருந்தார் என்பது பற்றிய கேள்விகள் என்னிடத்தில் இன்னமும் இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்த விடுதலைப்புலிகளுக்கு ஈற்றில் அவர்களின் நிலைப்பாட்டின் பிரகாரமே பதிலளிக்கப்பட்டது.
அதனை தவிர்க்க முடியாது. ஏனென்றால் எந்தவொரு விட்டுக்கொடுப்புக்கும் தயாராக இல்லாத தரப்பு ஈற்றில் தனது நிலைப்பாட்டாலேயே முடிவுக்கு வருவது இயற்கையானது. அது தான் புலிகளுக்கு நடந்தது.
தற்போதைய நிலையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகள் முழுமையாக தீர்க்கப்படவில்லை. அதுபற்றிய உரையாடல்கள் காணப்பட்டாலும் செயற்பாடுகள் இல்லை. இதற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கப்போவதாக கூறுகின்றார்கள்.
என்னைப் பொறுத்தவரையில் 13ஆவது திருத்தச்சட்டம் அரசியலமைப்பில் உள்ளது. அதனை முழுமையாக அமுலாக்குவதன் ஊடாக பிரச்சினைகளுக்கு தீர்வினைக் கண்டு கொள்ள முடியும்.
அதனைவிடுத்து ஒற்றையாட்சியை நீக்குகின்றோம், முறைமையை மாற்றுகின்றோம் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கின்ற எந்தவொரு செயற்பாடுகளும் நடைமுறையில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான விடயமாகும்.
ஆகவே தான் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்குவதோடு மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதன் ஊடாக கணிசமான பிரச்சினைகளுக்கு முடிவுக்கு கொண்டுவர முடியும் என்பது எனது நிலைப்பாடாகும் என்றார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!