இஸ்ரேலின் அடுத்த பிரதமர் நெதன்யாஹுவா, ஐசென்கொட்டா?
25 Nov, 2026
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
அமெரிக்காவின் பெரும் செல்வந்தரும் நிதியாளருமான ஜெஃப்ரி எப்ஸ்டீன் கடந்த 2019ஆம் ஆண்டு 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளை கடத்தி அவர்களை பெரும் செல்வந்தர்களின் பாலியல் தேவைகளுக்கு பயன்படுத்தியதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார்.
அதற்கு முன்பு வரை ஜெஃப்ரி எப்ஸ்டீன் பெயர் அதிக அளவில் பொதுவெளியில் அதிகம் வராமல் தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி எப்ஸ்டீன் பார்த்துக்கொண்டார்.
கரீபியன் பகுதியில் தனி தீவு, நியூயார்க், பாரிஸ், மெக்சிகோ இன்னும் பல நாடுகளில் விலை உயர்ந்த வீடுகள். அரசின் உயர் அதிகாரிகள், பெரும் செல்வந்தர்கள் உடனான தொடர்பு,
அடிக்கடி அழகான இளம் பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள். இதுதான் ஜெஃப்ரி எப்ஸ்டீன் பற்றிய பிம்பம் சமூகத்தில் உருவாக்கப்பட்டிருந்தது.
ஜெஃப்ரி எப்ஸ்டீன்
மேலும் FBI-யிடம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணையில் வாடிக்கையாளர் குறித்த பட்டியல் இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் இந்த தகவலுக்கு அமெரிக்காவின் FBI மறுப்பு தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தான் இந்த வழக்கின் விசாரணை வெளிப்படையாக நடத்த வேண்டும் என்றும் இதுதொடர்பான ஆதாரங்களை வெளியிட வேண்டும் என்றும் அமெரிக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
அதன் அடிப்படையில் அமெரிக்க நீதித்துறை ஜெஃப்ரி எப்ஸ்டீன் வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
இதில் ஜெஃப்ரி எப்ஸ்டீன் யாருடன் மெயில் தொடர்பு கொண்டிருந்தார், அவருக்கு யாரிடம் இருந்து மெயில் வந்துள்ளது மற்றும் பல்வேறு புகைப்படம் மற்றும் வீடியோக்களும் அடங்கும்.
இந்த ஆதாரங்கள்தான் தற்போது ஒட்டுமொத்த உலகையும் உலுக்கியுள்ளது. காரணம் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் மெயில் தொடர்பு மற்றும் புகைப்படங்களில் பல்வேறு உலக தலைவர்கள் குறிப்பாக அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன் தொடங்கி விஞ்ஞானி ஸ்டீப்பன் ஹாக்கிங்,
தொழிலதிபர் பில் கேட்ஸ் போன்ற பல முக்கிய தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
டிரம்ப் முதல் மோடி வரை அடிபடும் பெயர்கள்
கடந்த ஆண்டு ஜூன் மாதம் எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த பட்டியலில் அமெரிக்காவின் தற்போதைய அதிபர் டிரம்ப் பெயரும் இருக்கிறது என்றும் அதை அமெரிக்க அரசாங்கம் மறுப்பதாகவும் ஒரு பதிவு வெளியிட்டு பின்னர் அதை டெலிட் செய்தது பெரும் பேசுபொருளானது. இருப்பினும் டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.
இந்த நிலையில்தான் சமீபத்தில் வெளியிடப்பட்ட தரவுகளில் இந்திய தொழிலதிபர் அம்பானி, பிரதமர் மோடி, பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் போன்றோரின் பெயர்களும் இமெயில்களில் இடம்பெற்று உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் இந்த செய்திக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தை பொறுத்தவரை இமெயில்களில் பெயர்கள் குறிப்பிட்ட அனைவரும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் நேரடி தொடர்பு கொண்டவர்கள் என்று கூறிவிட முடியாது.
அவர்களின் பெயர்களை மூன்றாம் நபர்கள் பயன்படுத்தி இருக்கிறார்களே தவிர அவர்கள் அனைவரும் நேரடி தொடர்பு என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ஒரு தரப்பினர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
இதற்கிடையே சமீபத்தில் வெளியிடப்பட்ட சில Documentary மற்றும் ஆவணங்களின் படி அங்கு சிறுமிகளை பாலியல் ரீதியாக பயன்படுத்தியதை தவிர மனித மாமிசம் கொண்ட விருந்து நடத்தப்பட்டதாகவும் மேலும் குழந்தைகளை பலியிட்டதாகவும் போன்ற பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆனால் இதுகுறித்த வெளியாகும் தகவல்களை நிரூபிக்க போதிய தரவுகள் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையே ஜெஃப்ரி எப்ஸ்டீன் உடன் இணைந்து சிறுமிகளை மோசமாக கொடுமை படுத்தியது மற்றும் பாலியல் கொடுமைகள் செய்த விவகாரத்தில் எப்ஸ்டீன் காதலி Ghislaine Maxwell -க்கு 2022ஆம் ஆண்டு அமெரிக்க நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. இவர் தற்போது டெக்சாஸ் சிறையில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-இர்ஃபாத் சமீத்-
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!