news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரித்தது

01 Feb, 2024
இன்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் விலை 5 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 371 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக பெற்றோல் விலை 8 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 456 ரூபாவாகும். மேலும், ஒட்டோ டீசல் 5 ரூபாயால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 363 ரூபாவாகும். மேலும் சுப்பர் டீசல் 7 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 468 ரூபாவாகும். இதேவேளை, மண்ணெண்ணெய் விலையும் 26 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 262 ரூபாவாகும். இதேவேளை, சிபெட்கோவின் புதிய விலைக்கு ஏற்ப எரிபொருட்களின் விலையை அதிகரிக்க லங்கா ஐஓசி நிறுவனமும் தீர்மானித்துள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!