news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிபொருள் விலைகளில் திருத்தம்

31 Aug, 2024
எரிபொருள் விலைகளில் இன்று நள்ளிரவு முதல் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் மற்றும் ஐ. ஓ. சி. நிறுவனம் அறிவித்துள்ளன. பெற்றோல் 92 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 12 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 332 ரூபாவாகும். பெற்றோல் 95 ஒக்டேன் ஒரு லீற்றரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 377 ரூபாவாகும். டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 307 ரூபாவாகும். சுப்பர் டீசல் ஒரு லீற்றரின் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 352 ரூபாவாகும். ஆனால் மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!