news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் விசேட அறிவிப்பு, ‘மே’ மின்சார பட்டியல் கட்டாயம் 

11 Jul, 2022
எரிவாயு சிலிண்டர் இன்று முதல் விநியோகிக்கப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பில் 12 கிலோ கிராம் நிறையுடைய சிலிண்டரின் விலை 4,910 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதிக விலைக்கு பிற தரப்பினரிடமிருந்து கொள்வனவு செய்வதை தவிர்க்குமாறு நுகர்வோரிடம் அந்த நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்றும், நாளையும் கொழும்பு உட்பட சன நெரிசல்  அதிமாக உள்ள பகுதிகளில் லிட்ரோ எரிவாயு விநியோகம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, 13 ஆம் திகதி முதல் ஏனைய பகுதிகளுக்கும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கப்படும். இதேவேளை, சமையல் எரிவாயுவை பெற்றுக்கொள்வதற்கு, ​மே மாதத்துக்கான மின்சார பட்டியலை கோரப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற வகையில் எரிவாயு சிலிண்டர்களை சேமித்து வைப்பதை தடுக்கும் வகையிலேயே இந்த மின்பட்டியல் கோரப்பட்டுள்ளது என லிற்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விநியோக நடவடிக்கையில் இராணுவம், பொலிஸார் இணைத்துக் கொள்ளப்படுவார்கள் என்பதுடன் எரிவாயு விநியோகத்தை சிறந்த முறையில் முன்னெடுக்க பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என லிட்ரோ நிறுவனம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!