news@ilakkiyainfo.com

பிரிவுகள்

எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிப்பு - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

13 Dec, 2024
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பரவி வரும் எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரை 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்துள்ளார். இதுவரை குறித்த காய்ச்சலினால் யாழ்ப்பாண மாவட்டத்தில் 06 இறப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நோயாளர்களிடமிருந்து அனுப்பப்பட்ட மாதிரிகளில் 03 பேருக்கு எலிக்காய்ச்சல் நோய் இருப்பதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!