யாழ். அராலிச் சந்தியில் விபத்து - மின்கம்பத்துடன் முச்சக்கரவண்டி மோதி மூவர் படுகாயம்!
04 Nov, 2026
நான்கு வருட காலமாக குளிக்காமல், முடிவெட்டாமல், அதிக நித்திரையின்றி, சுகாதார சீர்கேட்டுக்கு மத்தியிலேயே இவர் வாழ்ந்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறிது காலம் சிலருடன் பழகி வந்த பாலா, பின்னரான காலத்தில் மக்களை கண்டால் காட்டுப் பகுதிக்குள் ஓடி ஒளிந்து விடுவதாக அவர் கூறுகின்றார்.
காட்டு யானை அச்சுறுத்தலுக்கு மத்தியிலேயே, இவர் இந்த பகுதியில் வாழ்ந்து வந்துள்ளார்.
இவ்வாறான நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் தகவலறித்த ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள், குறித்த பகுதிக்கு சென்று, பாரிய சிரமத்திற்கு மத்தியில் மூன்று நாட்களின் பின்னர் இவருடன் உரையாடியுள்ளனர்.
முதலில் தம்மை கண்ட பாலா, ஓடி ஒளிந்து கொண்டதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.
''இவர் தொடர்பான தகவல் எமக்கு கிடைத்தது. மூன்று நாட்கள் நின்றோம். முதல் நாள் போன போது, ஓடி மறைந்து விட்டார். பின்நேரம் வரை நின்றோம்.
"பாலா, வா" என்று கூப்பிட்டோம். "எங்களோட இருந்தனீர் தான் என்று சொல்ல, அவருக்கு புரிகின்றது. நீ எங்களோ முல்லைத்தீவுல இருந்தனீர்," என்று தெரிந்த ஒருவரை போல கதைத்தோம்.
"மெதுவாக அருகே நெருங்கியவுடன், நீங்கள் வர வேண்டாம்," என சொல்லி விட்டார்.
காசு ஏதாவது தந்து விட்டு, பிஸ்கட்டை சாப்பிட்டு போகுமாறு சொன்னார். அன்பாக தான் சொன்னார். பிறகு வா பாலா என்று சொல்லி அவருடன் நெருங்கி கதைத்தோம்.
முடியெல்லாம் வெட்ட வேண்டும். நீயொரு முன்னாள் போராளி, என்ன பிரச்னை, நாங்கள் உன் பிரச்னையை தீர்த்து வைக்கின்றோம் என்று கதைத்தோம். எனக்கு ஒன்றும் இல்லை, முடியெல்லாம் வெட்ட முடியாது என சொன்னார்.
ஒரு மாதிரி மூன்று நாட்களில் நாங்கள் கூப்பிட்டால் வரும் அளவிற்கு அவரை வளப்படுத்தி விட்டோம்;." என நகுலேஸ் கூறினார்.
அதன் பின்னர், சுகாதார அதிகாரிகளுக்கு அறிவித்து, அம்பியூலன்ஸ் வண்டி வரவழைக்கப்பட்டு, முன்னாள் போராளியான பாலா ஏறாவூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமது கட்சியின் பணியாளர் ஒருவரின் கண்காணிப்பில், ஏறாவூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாலாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
முன்னாள் போராளியான பாலா தொடர்பில் ஏற்கனவே சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் தவறான செய்திகளை வெளியிட்டிருந்ததாக அவர் கூறுகின்றார்.
சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள், பாலா தொடர்பில் தவறான காணொளிகளை வெளியிட்டு, சர்வதேச சமூகத்திடமிருந்து பணத்தை பெற்றுக்கொள்ளும் முயற்சிகளை மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு சில சமூக வலைத்தள பயன்பாட்டாளர்களின் நடவடிக்கையானது, முன்னாள் போராளிகளையும், தமிழர் போராட்டத்தையும் அவமானப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் உபத் தலைவர் என்.நகுலேஸ் கூறினார்.
அத்துடன், பாலாவின் எதிர்காலத்தை வளப்படுத்துவதற்கு யாராவது ஒருவர் முன்வர வேண்டும் எனவும், அவரின் வாழ்க்கையை முன்னோக்கி கொண்டு செல்ல நேரடியாக அவருக்கே உதவிகளை வழங்குமாறும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உப தலைவர் என்.நகுலேஸ் கேட்டுக்கொண்டார்.
21;பகுதியில் தூர்ந்துபோன கொட்டகை ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இச்சம்பவம் தொடர்யில் தற்போது தகவலறிந்த ஜனநாயகப் போராளிகள் கட்சியினர், மற்றும் அவரது சக முன்னாள் போராளிகளும் அவரை அணுகியுள்ளனர். இவர்களைக் கண்டதும் பாலா காட்டுப் பகுதிக்குள் மறைந்து விடுவார். பின்னர் அவரை தொடர்ந்து இரவு பகலாக அவதானிந்து வந்துள்ளனர்.
பின்னர் அவரது உறவினர்கள், மற்றும் அப்பகுதி கிராம சேவைகர் ஆகியோரது உதவியுடன் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உதவியுடன், உரிய இடத்திற்கே நோய்காவு வண்டி வரவழைக்கப்பட்டு அதில் சிகிச்கைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இதுவரை காலமும் காட்டிலுள்ள பழங்களை உண்டு கொண்டு, குளிக்காமல், முடிவெட்டாமல், சுகாதார சீர்கேடான முறையில் அவர் வாழ்ந்து வந்துள்ளார். நாம் அவருக்கு புதிக ஆடைகளை மாற்றி வைத்தியசாலையிலிருந்து அவரைக் கவனித்துக் கொள்வதற்காகவும், மேலும் ஒருவரையும் அனுப்பி வைத்துள்ளோம். என ஜனநாயக் போராளிகள் கட்சியைச் சேர்ந்த நகுலேஸ் தெரிவித்தார்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!