ஒரே நேரத்தில் 1,000 ட்ரோன்கள்.. ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல்.. தீப்பிடித்த எண்ணெய் கிடங்குகள்!!
18 Oct, 2026
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனப் பங்குகள் வீழ்ச்சியடையும் என சுமார் 500 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4,150 கோடி) தொகையை Short Selling முறையில் பில் கேட்ஸ் முன்பொருமுறை பந்தயம் கட்டியிருந்தார். இதுவே மஸ்க், தற்போது 'கர்மா உண்மையானது' என பதிலளிக்க காரணமாகும். கடந்த எட்டு ஆண்டுகளாக பில் கேட்ஸ் இந்த ஷார்ட் பொசிஷனை தொடர்ந்து வைத்திருப்பதாக மஸ்க் முன்பு கூறியிருந்தார். ஒருவேளை டெஸ்லா உலகின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனமாக மாறினால், இந்தப் பந்தயத்தால் பில் கேட்ஸ் போன்ற பெரும் கோடீஸ்வரர் கூட திவாலாவது உறுதி என்று மஸ்க் எச்சரித்திருந்தார். தற்போது உலகக் கோடீஸ்வரர் பட்டியலில் முதலிடத்தில் எலான் மஸ்க் இருக்க, முதல் 10 இடங்களில் கூட பில் கேட்ஸ் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அண்மையில் வெளியான எப்ஸ்டீன் கோப்புகளில் எலான் மஸ்க்கின் பெயரும் இடம் பெற்றுள்ளது .Short Selling என்பது பங்குச்சந்தையில் பங்குகள் விலை குறையும் போது லாபம் ஈட்டும் ஒரு உத்தியாகும். இதில், ஒரு நிறுவனத்தின் பங்குகளின் விலை வருங்காலத்தில் குறையும் என்று கணித்து கடன் வாங்கி அந்த பங்குகளை வாங்குவார்கள். அதை அதிக விலைக்கு விற்பார்கள். கணித்தபடி, அந்த பங்குகளின் விலை குறையும்போது அவற்றை மீண்டும் குறைந்த விலைக்கு வாங்கி, கடனைத் திருப்பிச் செலுத்தி லாபம் பார்ப்பார்கள். ",Bill Gates admits he had 2 affairs with Russian women, apologizes to staff over Jeffrey Epstein ties https://t.co/4tuP1qRpBm pic.twitter.com/Rok1KUqTK4
— New York Post (@nypost) February 25, 2026
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!