news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஐபிஎல் டி20 போட்டி- மும்பையை வீழ்த்தி சென்னை அணி அபார வெற்றி

08 Apr, 2023
♠ மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. ♠ சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். 16-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன. இன்று மும்பையில் நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, மும்பை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா, இஷான் கிஷன் அதிரடியாக ஆடினர். அணியின் எண்ணிக்கை 38ஆக இருந்தபோது ரோகித் சர்மா 21 ரன்னில் அவுட்டானார். இஷான் கிஷன் 31 ரன்னில் வெளியேறினார். கேமரூன் கிரீன் 12 ரன்னும், சூர்யகுமார் யாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். திலக் வர்மா 21 ரன்னில் அவுட்டானார். கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டிம் டேவிட் 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியில், மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி தனது ஆட்டத்தை தொடங்கியது. சென்னை அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டும், சாண்ட்னர், துஷார் தேஷ்பாண்டே 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்நிலையில், 158 ரன்கள் இலக்குடன் ஆடிய சென்னை அணி 18.1 ஓவர்களில் 159 ரன்கள் எடுத்தது. இதன்மூலம், மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி அபாரமாக வெற்றிபெற்றது.  

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!