இஸ்ரேல் தேர்தல்: யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் போனால் அரசாங்கம் எப்படி அமையும்?
28 Oct, 2026
சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிகளில் முற்பகல் 11 மணி முதல் மாலை 6.00 மணிவரை நேரடி சூரியஒளியை தவிர்த்துக்கொள்ளுமாறும் வயோதிபர்கள் மற்றும் பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துமாறும் பொதுமக்களை இத்தாலிய அரசாங்கம் அறிவுறுத்தியிருந்தது.
இத்தாலியின் ரோம் நகரில் நாளை திங்கட்கிழமை 40 பாகை செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் எனவும், செவ்வாய்க்கிழமை (18) இது 43 பாகை செல்சியஸாக அதிகரிக்கலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. ரோம் நகரில் ஆகக்கூடுதலாக 2007 ஆம் ஆண்டு 40.5 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது.
கிறீஸின் சில பகுதிகளில் நேற்றுமுன்தினம் 44.2 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது.
இத்தாகலியின் சிசிலி தீவில் 2021 ஆகஸ்ட்டில் 48.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. இதுவே ஐரோப்பாவில் பதிவான ஆக்ககூடுதலான வெப்பநிலையாகும்.
இதேவேளை, அமெரிக்காவில் புளோரிடா, டெக்ஸாஸ், கலிபோர்னியா, அரிஸோனா, வொஷிங்டன் உட்பட பல மாநிலங்களிலும் கடும் வெப்பநிலை நிலவுகிறது. நேற்றுமுன்தினம் 113 மில்லியன் அமெரிக்கர்களுக்கு வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன.
ஆசிய நாடான ஜப்பானின் கிழக்குப் பகுதியில் இன்றும் நாளையும் 39 பாகை செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்தியாவின் வட பகுதியில் கடும் வெப்பநிலைக்குப் பின்னர், கடந்த பல நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால், 90 இற்கும் அதிகமானோர் உயிரிந்துள்ளனர்.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!