news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தொடரில் ரணில் உரையாற்றுவார்

03 Sep, 2023
அமெரிக்காவில் இம்மாத நடுப்பகுதியில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் பொது சபைக் கூட்டத்தில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றவுள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 78ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை நியூயார்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள பேச்சாளர் பட்டியலின்படி, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றவுள்ளார். இந்த பொதுச் சபைக்கூட்டத் தொடரில் உலகத் தலைவர்களும், இளம் தலைவர்களும் கலந்துக்கொள்ளவுள்ளனர். இம்முறை பொது சபைக் கூட்டம் “நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒற்றுமையை மீண்டும் உருவாக்குதல்“ என்ற கருத்திட்டத்தின் கீழ் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தொடரில் 2030ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி நிரலின் மீதான நடவடிக்கைகளை துரிதப்படுத்துதல் மற்றும் அமைதியை நோக்கி நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கான திட்டங்கள் மற்றும் உலக காலநிலை மாற்றம் தொடர்பிலான விவகாரங்களுடன் மனிதவுரிமை விவகாரங்கள் பிரதானமாக கலந்துரையாடவுள்ளது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!