news@ilakkiyainfo.com

பிரிவுகள்

ஒரு பவுன் தங்கத்தின் விலை 400,000 ரூபாயாக அதிரடியாக அதிகரித்தது

17 Oct, 2025
இலங்கையில் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன நிலையில், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சம் ரூபாயை இன்று (17) வௌ்ளிக்கிழமை கடந்துள்ளது. இதன்படி 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 4 லட்சத்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக செட்டியார்தெரு தங்க சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது வியாழக்கிழமையுடன் (16) ஒப்பிடும் போது இதன் விலை 15 ஆயிரம் ரூபாயால் அதிகரித்துள்ளது. அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை இன்றைய தினம் 13 ஆயிரத்து 800 ரூபாயாக அதிகரித்து 3 லட்சத்து 79 ஆயிரத்து 200 ரூபாயாக காணப்படுகிறது.

கருத்துகள் (Comments)

இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!