ஒரே நாளில் 86,432 பேருக்கு தொற்று உறுதி- இந்தியாவில் 40 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசுக்கு ஒரே நாளில் 86,432 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு 40 லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், கடந்த சில வாரங்களாக பாதிப்பு எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது. தினசரி நோய்த்தொற்று 80 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40 லட்சத்தை கடந்துள்ளது. கொரோனா பாதிப்பு 40,23,179 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 86432 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 1089 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 69561 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,37,151ல் இருந்து 31,07,223 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 70072 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 846395 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.73 சதவீதமாக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 77.23 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக நேற்று வரை 4,77,38,491 சாம்பிள்கள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாகவும், நேற்று மட்டும் 10,59,346 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!