இஸ்ரேல் தேர்தல் நாளை: "சிறந்த போர்வீரர் என்பதை நினையுங்கள்" - நெதன்யாகுவுக்கு ட்ரம்ப் ஆதரவு
27 Oct, 2026
ஈரான் மீது சேர்ந்து தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
ஒரே நேரத்தில் 8 நாடுகள் மீது தாக்குதல்..
அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் 8 நாடுகளை ஈரான் தாக்கியுள்ளது.. கத்தார் நாட்டின் தோஹாவில் உள்ள அமெரிக்க தளத்தை குறிவைத்து ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளதாக கத்தார் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருந்தார்.
அதே போல ஜோர்டானில் உள்ள அமெரிக்க தலைமையகத்தை ஈரான் தாக்கியுள்ளது. ஜோர்டான் இஸ்ரேலின் அண்டை நாடாகும், அமெரிக்கா தனது சக்திவாய்ந்த F-22 போர் விமானங்களை நிறுத்தி வைத்திருந்தது...
எண்ணெய் கப்பல் மற்றும் அமெரிக்காவின் போர்க்கப்பல் மீது தாக்குதல் நடத்திய ஈரான்
அதுமட்டுமின்றி, குவைத்தில் உள்ள அமெரிக்க தளம் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அதே போல, பஹ்ரைனில் உள்ள ஒரு அமெரிக்க தளத்தை குறி வைத்து அதிரடி தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது.
அங்குள்ள ராணுவ தளத்தில் அமெரிக்கா தனது F-12 ரக விமானங்களை நிறுத்தியிருந்தது, அதனை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக அறிவித்தது...
அபுதாபியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தையும் ஈரான் தாக்கியுள்ளது. இந்த தாக்குதலுக்குப் பிறகு, முழு ஐக்கிய அரபு எமிரேட்ஸிலும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் இஸ்ரேல் மீதும் ஈரான் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது..
அமெரிக்காவுக்கும் ஈரானுக்குமான தூரம் 11,700 km என்பதால் அமெரிக்கா மீது ஈரானால் நேரடி தாக்குதல் நடத்த நடத்தமுடியாது என்பதால் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கா ராணுவ தளங்களை குறி வைத்து ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் (Comments)
உங்கள் கருத்தைத் தெரிவிக்கவும் (Leave a Reply)
இந்தச் செய்தி குறித்து உங்கள் கருத்தைப் பதிவு செய்ங்கள்!